/* */

செங்கல்பட்டில் தனது படத்துடன் நினைவு தின போஸ்டர் ஒட்டிய வியாபாரி!

செங்கல்பட்டு மாவட்டத்தில் வியாபாரி ஒருவர் தனது படத்துடன் நினைவு தின போஸ்டர் ஒட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்.

HIGHLIGHTS

செங்கல்பட்டில் தனது படத்துடன் நினைவு தின போஸ்டர் ஒட்டிய வியாபாரி!
X

செங்கல்பட்டு பகுதியில் வியாபாரி மனோகரன் ஒட்டியுள்ள விழிப்புணர்வு போஸ்டர்.

செங்கல்பட்டு மாவட்டம் , ஆத்தூர் ஊராட்சி , புவனேஸ்வரி நகர் பகுதியை சேர்ந்தவர் மனோகரன். தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக மதுவிற்கு அடிமையாகி உள்ளார். இதனால் வீட்டில் உள்ள குடும்ப அட்டை உள்ளிட்டவைகளை அடமானம் வைத்து மது அருந்தி வந்துள்ளார்.

இதனால் தனக்கு பெருத்த அவமானம் ஏற்பட்டு வந்ததால் , குடும்பத்தினருடன் உறவு முற்றிலும் துண்டிக்கும் நிலை ஏற்படும் சூழல் நிலவுவதை உணர்ந்து, மது அருந்துவதை கைவிட முடிவு செய்த மனோகரன் ஓராண்டுக்கு முன் அந்தப் பழக்கத்தை கைவிட்டு உள்ளார். மது அருந்தும் பழக்கத்தை விட்டு ஓராண்டு நிறைவு பெற்றதை ஒட்டி மதுப்பழக்கத்தில் இருந்து தன்னால் விடுபட்டதை போல் அனைவரும் கொடிய மதுப்பழக்கத்திற்கு அடிமையாகாதீர்கள் என விழிப்புணர்வு ஏற்படுத்த மனோகரன் முடிவு செய்தார்.

இதற்காக பல முறை யோசித்த மனோகரன் திடீரென தான் வசிக்கும் பகுதியில் ஒரு போஸ்டரை ஒட்டி உள்ளார். முதலாமாண்டு நினைவு தினம் என்ற தலைப்பில் இடம்பெற்றுள்ள போஸ்டரை கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். குறிப்பாக, மனோகரனின் உறவினர்கள் அந்த போஸ்டரை பார்த்து பேரதிர்ச்சியாகினர். இருப்பினும், அந்த போஸ்டரின் இடம் பெற்றுள்ள மற்ற வாசகங்களை படித்த பிறகே அவர்கள் பெருமூச்சுவிட்டனர்.

அப்படி என்ன அந்த போஸ்டரில் இருக்கிறது? என்கிறீர்களா.. அதாவது, முதலாமாண்டு நினைவு தினம் என தனது படத்துடன் ஒட்டிய போஸ்டரில், குடியினால் ஏற்படும் தீமைகளை அதில் குறிப்பிட்டு தனது செல்போன் எண்ணையும் மனோகரன் பதிவிட்டு உள்ளார். நூதன முறையில் மனோகரன் யோசித்த இந்த விழிப்புணர்வு போஸ்டருக்கு ஓரளவு வரவேற்பு கிடைத்துள்ளது.

மேலும், இதேபோல் அந்தப் பகுதியை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களுக்கும் இது குறித்த துண்டு பிரசுரங்களை மனோகரன் வழங்கி வருகிறார். மது என்ற அரக்கனின் பிடியில் இருந்து விடுபட்ட தான் தற்போது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக உள்ளதாகவும், தற்போது செங்கல்பட்டு - காஞ்சிபுரம் சாலையில் ஆத்தூர் பகுதியில் தர்பூசணி வியாபாரம் செய்து வருவதாகவும், தன்னை குடும்பத்தினர் பெரிதும் மதிப்பதாகவும் மனோகரன் தெரிவித்தார்.

இதுஒருபுறம் இருக்க தமிழகத்தில் அரசு மதுபான கடையில் மூலம் வரும் வருமானத்தைக் கொண்டு மக்கள் நல திட்டங்களுக்கு செலவிடுவதாக அரசு கூறி வந்தாலும், அதனை நகருக்குள் செயல்படக்கூடாது எனவும் படிப்படியாக மது கடைகள் குறைக்கப்படும் என கூறி வந்த அரசு, தற்போது இதுவரை அதற்கான எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்பதும் பெரும் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.

Updated On: 27 Feb 2023 4:15 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    இந்தியாவின் மதிப்புமிக்க பிரபலம் யார் தெரியுமா..?
  2. கல்வி
    பூமியின் முதல் செல் எப்படித் தோன்றியது..? இந்திய விஞ்ஞானிகள்...
  3. நாமக்கல்
    எருமப்பட்டியில் நாளை, நாமக்கல்லில் 20ம் தேதி மின்சார நிறுத்தம்...
  4. நாமக்கல்
    கூடுதல் கட்டணம் வசூலித்த தனியார் பஸ் பர்மிட்டை ஏன் ரத்து...
  5. சுற்றுலா
    ஜாலியா ஒரு டூர் போவோமா..? மனசு லேசாகும்ங்க..!
  6. கல்வி
    விமானி பயிற்சி பள்ளியை அமைக்கும் ஏர் இந்தியா
  7. லைஃப்ஸ்டைல்
    உங்கள் வருமானத்தை எவ்வாறு அதிகரிப்பது?
  8. சினிமா
    அன்பு, ஆனந்தி காதல்...! இனி இப்படித்தான் போகப்போகுதா?
  9. உலகம்
    அமெரிக்காவில் கொடி கட்டிப்பறக்கும் இந்தியர்கள்..!
  10. தமிழ்நாடு
    மொட்டைக்கடிதம் எழுதிய போலீஸ்..! 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பணி..!