/* */

செந்துறை அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

செந்துறை அருகே அயன்தத்தனூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம மக்கள் சார்பில் ஆரப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

செந்துறை அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
X

அயன்தத்தனூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம கோயில் பூசாரிகள் நலச்சங்கம், திருவள்ளுவர் ஞான மன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.




அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த அயன்தத்தனூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம கோயில் பூசாரிகள் நலச்சங்கம், திருவள்ளுவர் ஞான மன்றம் மற்றும் கிராம மக்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில், அயன்தத்தனூரில் உள்ள காங்கேயன் ஏரி, பின்னேரி ஏரி, கடம்பா ஏரி உள்ளிட்ட ஏரிகளை சுத்தம் செய்து, தடுப்பு சுவர் மற்றும் கரைகளில் மரக்கன்றுகள் நடவேண்டும். மயான சாலை சீரமைத்து தர வேண்டும். திருநாகேஸ்வரர் கோயிலை சுற்றி சுவர் எழுப்ப வேண்டும். கிராம மக்களுக்கு 100 நாள் வேலைத்திட்டத்தை முறையாக வழங்க வேண்டும். கால்நடை கிளை மருத்துவமனை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆர்ப்பாட்டத்துக்கு கிராம கோயில் பூசாரிகள் நலச்சங்கசங்க மாவட்டத் தலைவர் ஆதிமூலம் தலைமை வகித்தார். திருவள்ளுவர் ஞான மன்ற தலைவர் ராவணன் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 21 April 2022 9:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  2. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  3. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  4. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  6. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  7. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  8. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பெண்மை சக்தியைப் போற்றும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
  10. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!