/* */

அரியலூர் மாவட்டம் திருமழபாடி வைத்தியநாத சுவாமி கோயில் மாசிமகத் தேரோட்டம்

அரியலூர் மாவட்டம் திருமழபாடி சுந்தராம்பிகை உடனுறை வைத்தியநாதசுவாமி கோயிலில் மாசிமகத் தேரோட்டம் இன்று நடைபெற்றது.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டம் திருமழபாடி வைத்தியநாத சுவாமி கோயில் மாசிமகத் தேரோட்டம்
X

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே திருமழபாடி சுந்தராம்பிகை உடனுறை வைத்தியநாதசுவாமி கோயிலில் மாசிமகத் தேரோட்டம் நடந்தது.


அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேயுள்ள திருமழபாடியில் திருமால், இந்திரன் ஆகியோரால் வழிபட பெற்றதும், ஞானசம்மந்தர், அப்பர், சுந்தரர், ஐயடிகள், காடவர்கோன் ஆகியோர் திருப்பதிகங்கள் பாடி வழிப்பட்ட வரலாற்று புகழ்பெற்ற சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாதசுவாமி கோயில் உள்ளது.

இந்த கோயிலில் ஆண்டுதோறும் மாசிமகப்பெருவிழா நடைபெறும். நிகழாண்டுக்கான மாசிமகப் பெருவிழா விழா கடந்த 8 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமிகள் எழுந்திருளி வீதியுலா நடைப்பெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேரோட்டம் இன்று நடைபெற்றது. தேரில் சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாதசுவாமி அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.


இந்து அறநிலையத்துறை அலுவலர்கள் மற்றும் பக்தர்கள் பெரியதேரை வடம்பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். தேர் ஊரின் முக்கிய வீதி வழியாக வலம் வந்து நிலையை அடையும். திருமானூர் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.


Updated On: 16 Feb 2022 9:05 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...