/* */

ராஜேந்திர சோழன் பிறந்த நாளான 26ம்தேதி அரியலூர் மாவட்டத்திற்கு விடுமுறை

ராஜேந்திரசோழன் பிறந்த நாளான 26ம்தேதி ஆடிதிருவாதிரை அன்று அரியலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

ராஜேந்திர சோழன் பிறந்த நாளான 26ம்தேதி  அரியலூர் மாவட்டத்திற்கு விடுமுறை
X
பைல் படம்.

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் அமைந்துள்ள சோழீஸ்வரர் ஆலயம் உலக பிரதான பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கங்கைகொண்ட சோழபுரத்தை தலைநகராக கொண்டு மாமன்னர் ராஜேந்திர சோழன் கடாரம் வரை வென்று சோழ சாம்ர ராஜ்யத்தை நிலை நிறுத்தினார். இவருடைய பிறந்த நாளான ஆடி திருவாதிரை ஜூலை 26 ஆம் தேதி வருகின்றது. இதனை அரசு விழாவாக கொண்டாட முதலமைச்சர் கடந்தாண்டு அறிவித்தார்.

இந்நிலையில் ஆடி திருவாதிரை அன்று வருகின்ற 26 ஆம் நாள் அரியலூர் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை விட்டு அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி அறிவித்துள்ளார்.

மேலும் அதனை ஈடு செய்யும் பொருட்டு அடுத்த மாதம் 6 ஆம் தேதி சனிக்கிழமை அன்று முழு வேலை நாள் எனவும் அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி அறிவித்துள்ளார்.

Updated On: 19 July 2022 6:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒருமனதான திருமண தம்பதிக்கு வாழ்த்து..!
  2. வந்தவாசி
    வக்கீலை தாக்கிய காவல் துணை ஆய்வாளர் இடமாற்றம்
  3. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் சூறைக் காற்றுக்கு 3 லட்சம் வாழை மரங்கள் சேதம்
  4. இந்தியா
    டெல்லியில் வருகிற 21ம் தேதி காவிரி நதி நீர் மேலாண்மை ஆணைய குழு
  5. வீடியோ
    10 பெண்புலிக்கு நடுவில் ஒரு நரி Veeralakshmi பகீர் !#police...
  6. வீடியோ
    🤣எந்த நேரத்துல எந்த Stunt அடிக்கிறதுனு தெரியல😂!#annamalai...
  7. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  8. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  9. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  10. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்