/* */

அரியலூரில் 25-ம்தேதி முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்

அரியலூரில் வருகிற 25ம் தேதி படைவீரர் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்க இருப்பதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்

HIGHLIGHTS

அரியலூரில் 25-ம்தேதி முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்
X

பைல் படம்.

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அரியலூர் மாவட்டமுன்னாள் படைவீரர், அவர்தம் குடும்பத்தினர் மற்றும் படைப்பிரிவில் பணிபுரியும் வீரர்களின் குடும்பத்தினர்களுக்கென சிறப்பு குறைதீர்க்கும் நாள் 25.08.2022 வியாழக்கிழமை மாலை 4.00 மணிக்கு மாவட்ட கலெக்டர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் குறைதீர்கும் நாள் கூட்ட அரங்கத்தில் நடத்தப்படவுள்ளது.

எனவே, அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர், அவர்தம் குடும்பத்தினர் மற்றும் படைப்பணியில் பணிபுரிபவர்களைச் சார்ந்தோர்கள் தங்களது கோரிக்ககையினை மனுவாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் அன்றைய தினம் நேரில் சமர்ப்பிக்கலாம்.

மேலும் மனுக்கள் அளிக்க விரும்புவோர் மனுவின் இருபிரதிகளை அடையாள அட்டை நகலுடன் அளித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 14 Aug 2022 1:28 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  3. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  5. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  6. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு
  8. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில், பலத்த மழை: சாலைகளில் மழைநீர்!
  9. குமாரபாளையம்
    10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி மாணவ,...
  10. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...