/* */

அரியலூர் மாவட்டத்தில் நாளை பட்டா பிழை திருத்த சிறப்பு முகாம்

அரியலூர் மாவட்டத்தில் பட்டா பிழை திருத்தங்கள் தொடர்பான சிறப்பு முகாம் நாளை வருவாய் கிராமங்கள் வாரியாக நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டத்தில் நாளை பட்டா பிழை திருத்த சிறப்பு முகாம்
X

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

விவசாயிகள், வீட்டு உரிமையாளர்களின் பட்டாவில் உள்ள சிறு கணினி திருத்தங்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காண பட்டா திருத்த சிறப்பு முகாம் மாவட்டத்தின் குறிப்பிட்ட கிராமங்களில் 17.12.2021 (வெள்ளிக் கிழமை) அன்று நடக்கவுள்ளது.

அரியலூர் மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் உள்ள அனைத்து வருவாய் கிராமங்களிலும், விவசாயிகள், வீட்டு உரிமையாளர்களின் பட்டாவில் உள்ள சிறு கணினி திருத்தங்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கென துணை ஆட்சியர் நிலையில் கண்காணிப்பு மற்றும் தீர்வு அலுவலர்கள் தலைமையில் வாரந்தோறும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளது. முகாமில் பெறப்படும் சிறு கணினி திருத்தம் சார்ந்த மனுக்களுக்கு அன்றைய தினமே தீர்வு காணப்படும்.

வட்டம் வாரியாக 17.12.2021 அன்று (வெள்ளிக்கிழமை) முகாம் நடக்கவுள்ள கிராமங்களின் விவரம்-

அரியலூர் வட்டத்தில் ரெட்டிப்பாளையம் கிராமத்திற்கு ரெட்டிப்பாளையம் கிராம சேவை மைய கட்டிடத்திலும் கரைவெட்டி மற்றும் கீழக்காவட்டாங்குறிச்சி கிராமங்களுக்கு கீழக்காவட்டாங்குறிச்சி கிராம சேவை மைய கட்டிடத்திலும்

செந்துறை வட்டத்தில் ஆனந்தவாடி கிராமத்திற்கு ஆனந்தவாடி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலும்

உடையார்பாளையம் வட்டத்தில் பிராஞ்சேரி மற்றும் பெரியவளையம் கிராமங்களுக்கு பெரியவளையம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலும் கீழநத்தம், அம்பாபூர் மற்றும் மணகெதி கிராமங்களுக்கு மணகெதி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலும்

ஆண்டிமடம் வட்டத்தில் காட்டாத்தூர்(வ) மற்றம் மேலூர் கிராமங்களுக்கு காட்டாத்தூர்(வ) கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலும் முகாம் நடக்கவுள்ளது.

மேற்படி இந்த சிறப்பு முகாமில் சிறு கணினி திருத்தங்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கு பொதுமக்கள் தங்களிடம் உள்ள ஆவணங்களுடன் மனுக்கள் அளித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 16 Dec 2021 11:53 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  3. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  4. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  5. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  6. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  7. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  8. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  9. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  10. திருப்பரங்குன்றம்
    கூடலழகர் பெருமாள் கோயில், வைகாசிப் பெருந் திருவிழா!