/* */

அரியலூர் மாவட்டத்தில் நாளை பட்டா பிழை திருத்த சிறப்பு முகாம்

அரியலூர் மாவட்டத்தில் நாளை பட்டா பிழை திருத்த சிறப்பு முகாம் நடைபெறும் வருவாய் கிராமங்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டத்தில் நாளை பட்டா பிழை திருத்த சிறப்பு முகாம்
X

விவசாயிகள், வீட்டு உரிமையாளர்களின் பட்டாவில் உள்ள சிறு கணினி திருத்தங்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காண பட்டா திருத்த சிறப்பு முகாம் மாவட்டத்தின் குறிப்பிட்ட கிராமங்களில் 15.12.2021 (புதன் கிழமை) அன்று நடக்கவுள்ளது.

அரியலூர் மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் உள்ள அனைத்து வருவாய் கிராமங்களிலும், விவசாயிகள், வீட்டு உரிமையாளர்களின் பட்டாவில் உள்ள சிறு கணினி திருத்தங்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கென துணை ஆட்சியர் நிலையில் கண்காணிப்பு மற்றும் தீர்வு அலுவலர்கள் தலைமையில் வாரந்தோறும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளது.

முகாமில் பெறப்படும் சிறு கணினி திருத்தம் சார்ந்த மனுக்களுக்கு அன்றைய தினமே தீர்வு காணப்படும்.

வட்டம் வாரியாக 15.12.2021 அன்று (புதன் கிழமை) முகாம் நடக்கவுள்ள கிராமங்களின் விவரம்:

அரியலூர் வட்டத்தில் கடுகூர் மற்றும் அயன் ஆத்தூர் கிராமங்களுக்கு கடுகூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலும் அழகிய மணவாளம் மற்றும் காமரசவள்ளி கிராமங்களுக்கு அழகிய மணவாளம் கிராம சேவை மைய கட்டிடத்திலும்

செந்துறை வட்டத்தில் மணக்குடையான் கிராமத்திற்கு மணக்குடையான் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலும்

உடையார்பாளையம் வட்டத்தில் ஆமணக்கந்தோண்டி, உட்கோட்டை(வ) மற்றும் உட்கோட்டை(தெ) கிராமங்களுக்கு உட்கோட்டை(வ) கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலும் வெண்மான்கொண்டான்(கி) மற்றும் பருக்கல்(மே) கிராமங்களுக்கு வெண்மான்கொண்டான்(கி) கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலும்

ஆண்டிமடம் வட்டத்தில் அணிக்குதிச்சான்(வ) மற்றும் அணிக்குதிச்சான்(தெ) கிராமங்களுக்கு அணிக்குதிச்சான்(தெ) கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலும் முகாம் நடக்கவுள்ளது.

மேற்படி இந்த சிறப்பு முகாமில் சிறு கணினி திருத்தங்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கு பொதுமக்கள் தங்களிடம் உள்ள ஆவணங்களுடன் மனுக்கள் அளித்து பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Updated On: 14 Dec 2021 11:59 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...
  4. திருவள்ளூர்
    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு...
  5. இந்தியா
    நடிகை ராஷ்மிகா பாராட்டு! பிரதமர் மோடி நெகிழ்ச்சி!
  6. உலகம்
    59 ஆண்டு கால 'லீ' அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்தது எப்படி?
  7. திருவள்ளூர்
    ஆசிரியர்கள் - முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி!
  8. ஈரோடு
    சத்தி அருகே ஆம்னி வேனில் கடத்திய 16 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
  9. பூந்தமல்லி
    கூவம் ஆற்றின் அருகே வீடுகளை அப்புறப்படுத்த நோட்டீஸ்: மக்கள் சாலை...
  10. இந்தியா
    கேதார்நாத் கோயில் நடை திறப்பு!