/* */

"ஒரு நாள் எம்.எல்.ஏ" வி.ஏ.ஓ.விற்கு தற்காலிக பதவி தந்த அமைச்சர்

நாளைக்கு நீ "ஒருநாள் எம்.எல்.ஏ" என கிராம நிர்வாக அலுவலருக்கு தற்காலிக பதவி தந்தார் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்.

HIGHLIGHTS

ஒரு நாள் எம்.எல்.ஏ  வி.ஏ.ஓ.விற்கு தற்காலிக பதவி தந்த அமைச்சர்
X

அமைச்சர் சிவசங்கர் வாய்க்கால் பிரச்சினை பற்றி பொதுமக்களிடம் பேசினார்.

பெருசா வெட்டிடாத, லேசா தண்ணீர் ஓடுற மாதிரி கம்ப்ளீட்டா வெட்டி விடு. நாளைக்கு நீ "ஒருநாள் எம்.எல்.ஏ" என் சார்பில் இருந்து பணியை பார்த்துக்க என அருகிலிருப்பவரிடம் சொல்கிறார் ஒரு சட்டமன்ற உறுப்பினர்.

சரிங்க என பதில் வருகிறது. பதிலாய், மக்கள் கூட்டத்திலிருந்து மகிழ்ச்சியோடு சிரிப்பலை எழுகிறது.

ஏதோ தெருவாசி ஒருவர், தம் பகுதி பிரச்சினையை பக்கத்து வீட்டுக்காரரோடு பேசித் தீர்வு காண்பதுபோல தானே நினைக்கத் தோன்றுகிறது?

ஒரு அமைச்சருக்கும் - அவரை தேர்வு செய்த மக்களுக்குமான உரையாடலே இந்த பதிவு.

அந்த அமைச்சர் குன்னம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட "எஸ்.எஸ்.சிவசங்கர்".

அண்மையில் பெய்த தொடர் மழையினால் மருவத்தூர் பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அதை வெளியேற்றி தாருங்கள் என அவரை தேர்வு செய்த மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

பதிலாக மக்களிடம், அவர் பேசியது தான் பதிவின் முதல் பத்தி.

பெருசா வெட்டிடாத, லேசா தண்ணீர் ஓடுற மாதிரி கம்ப்ளீட்டா வெட்டி விடு. நாளைக்கு நீ "ஒருநாள் எம்.எல்.ஏ!" என் சார்பில் இருந்து பணியை பார்த்துக்க என கிராம நிர்வாக அலுவலரிடம் சொல்கிறார்.

அருகிலிருந்த கட்சிக்காரர் நாங்க பாத்துக்கிறோம் என பதிலளிக்க, நாம் செய்தால் ஒரு சார்பாக வேலை நடப்பதாக எதிர்க்கட்சி நினைக்க வாய்ப்புண்டு. ஊர் பொதுவான நபராக இருந்து அவரே செய்யட்டும் என கிராம நிர்வாக அலுவலரை பணிக்கிறார்.

அவரும் சிறப்பாக செய்கிறேன் என்கிறார்.

கூடவே, என் செலவில் ஜே.சி.பி இயந்திரம் அனுப்பி வைக்கிறேன். வண்டி வந்ததும் இங்க பறிக்காத, அங்க பறிக்காதனு சொல்லாம பாத்துக்கனும் என மக்களுக்கு அன்பு வேண்டுகோளும் வைத்து விடை பெறுகிறார் அமைச்சர்.

Updated On: 26 Dec 2021 1:20 PM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகரிடம் சிபிசிஐடி விசாரணை
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. காஞ்சிபுரம்
    ராஜீவ் நினைவிடத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் தலைமையில் நினைவு அஞ்சலி
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவேந்தல் நிகழ்ச்சி
  6. வீடியோ
    🔴 LIVE : Instagram-மில் ஹீரோணி தேடும் SOOR ! பங்கமாய் கலாய்த்த SK !...
  7. லைஃப்ஸ்டைல்
    நகத்த கவனிச்சீங்களா? புற்றுநோய் வர வாய்ப்பிருக்காமே!
  8. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது
  9. லைஃப்ஸ்டைல்
    சமூக வலைத்தளங்களில் பொங்கல் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதில் சில...
  10. லைஃப்ஸ்டைல்
    தமிழர் பெருமையை சொல்லும் திருநாள் வாழ்த்துகள்!