Begin typing your search above and press return to search.
ஐஜேகே 12ம் ஆண்டு துவக்கவிழா
அரியலூரில் ஐ,ஜே.கே. கட்சியின் 12ம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது.
HIGHLIGHTS
இந்திய ஜனநாயக கட்சியின் 12ம் ஆண்டு துவக்கவிழா இன்று தமிழகம் எங்கும் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அரியலூர் மாவட்டம் அயன்ஆத்தூர் கிராமத்தில் இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் கொண்டாடப்பட்டது.
அரியலூர் சட்டமன்ற தொகுதி ஐஜேகே வேட்பாளர் ஜவகர் கட்சி கொடியை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். மேலும் அக்கிராமத்தின் முக்கிய இடங்களில் 100 மரக்கன்றுகளை நடும் திட்டத்தை மரக்கன்றுகளை நட்டு தொடங்கிவைத்தார்.
பொதுமக்களுக்கும் இலவசமாக அத்திரமம், இலுப்பைமரம், நாவல், முந்திரி உள்ளிட்ட 150 மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் இந்திய ஜனநாயக கட்சிப் இளைஞரணி பொருப்பாளர்கள் இளவரசன், வேலுச்சாமி, வேல்முருகன், தமிழ்ச்செல்வன், அண்ணாதுரை, மோகன் உள்ளிட்ட பங்கேற்றனர்.