/* */

அரியலூரில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு: ஆட்சியர் தகவல்

அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் இலவச பயிற்சி வகுப்பு அனுபவம் வாய்ந்த பயிற்றுநர்களை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது.

HIGHLIGHTS

அரியலூரில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு: ஆட்சியர் தகவல்
X

பைல் படம்.

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில், மத்திய, மாநில அரசுப்பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக இலவச பயிற்சி வகுப்பு அனுபவம் வாய்ந்த பயிற்றுநர்களை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்காக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையால் பிரத்யேகமாக மெய்நிகர்கற்றல் இணையதளம் https://tamilnaducareerservices.tn.gov.in உருவாக்கப்பட்டுள்ளது. இவ்விணையதளத்தில் TNPSC, TNUSRB, IBPS, SSC, RRB & UPSC போன்ற பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான மென் பாடகுறிப்புகள், மாதிரி வினாத்தாள்கள், காணொளிகள் ஆகியன இடம் பெற்றுள்ளன.

TNUSRB அறிவிக்கப்பட்டுள்ள சார்ஆய்வாளர் மற்றும் இரண்டாம் நிலை காவலர் பணிக்காலியிடங்கள் மற்றும் TNPSC-ஆல் அறிவிக்கப்பட்டுள்ள தொகுதி-IV பணிக் காலியிடங்களுக்கான இலவச பயிற்சி வகுப்பு 07.04.2022 முதல் அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் நடைபெற உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளும் இளைஞர்களுக்கு இலவச பாடகுறிப்புகள் வழங்கப்பட்டும், மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டும் வருகிறது.

இவ்விலவச பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ள படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மேற்குறிப்பிட்ட பணிக் காலியிடங்களுக்கு விண்ணப்பித்த விண்ணப்ப நகல்களுடன், கடவுச்சீட்டு அளவுள்ள புகைப்படம், தங்களது ஆதார் அட்டை நகல் மற்றும் சுயவிவர குறிப்புகளுடன் (BIO-DATA) அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தினை நேரில் தொடர்புகொள்ளலாம். எனவே, அரியலூர் மாவட்டத்தினை சார்ந்த போட்டித்தேர்வினை எதிர்கொள்ளும் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயனடையுமாறு அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Updated On: 5 April 2022 9:10 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    ப்ளூடூத் மற்றும் வழிசெலுத்துதல் வசதியுடன் ஸ்டீல்பேர்ட் ஃபைட்டர்...
  2. லைஃப்ஸ்டைல்
    தைத்திருநாளும் தமிழர்களின் பாரம்பரியமும்
  3. சிங்காநல்லூர்
    அதிமுக ஆட்சியியின் குடிநீர் திட்டங்களை திமுக செயல்படுத்தவில்லை :...
  4. லைஃப்ஸ்டைல்
    உலகெங்கும் பக்ரீத் கொண்டாட்டங்களில் உள்ள சுவாரஸ்ய வேறுபாடுகள்
  5. காஞ்சிபுரம்
    திருமண மண்டபங்களுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  6. கோவை மாநகர்
    தடுப்பணைகளை கட்டி தமிழகத்தை வஞ்சிக்கும் அண்டை மாநிலங்கள்: இபிஎஸ்...
  7. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்வரத்து 762 கன அடி
  8. வாகனம்
    வரே வா...வரப்போகுது ராயல் என்ஃபீல்டு கொரில்லா 450..! எக்கச்சக்க...
  9. இந்தியா
    மம்தா பானர்ஜிக்கு பாரத் சேவாஷ்ரம் சங்க துறவி நோட்டீஸ்
  10. டாக்டர் சார்
    அமைதியான எதிரி..! அமைதியான மாரடைப்பு..! உஷாரா இருக்கணும்ங்க..!