/* */

அரியலூர் நீதிமன்ற வளாகத்தில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம்

அரியலூர் நீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

அரியலூர் நீதிமன்ற வளாகத்தில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம்
X

அரியலூர் கோர்ட்டு வளாகத்தில் மருத்துவ முகாம் நடந்தது.

அரியலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் அரியலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்காடிகள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள், நீதிமன்ற பணியாளர்கள் மற்றும் பொது மக்களுக்கும் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.

மேற்படி முகாமில் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் எஸ்.மகாலட்சுமி தலைமை தாங்கினார். மூத்த சிவில் நீதிபதி N.அழகேசன் முன்னிலை வகித்தார்.

மருத்துவ முகாமில் பொது அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர்சி.கூடுதல் மாவட்ட நீதிபதி ஏ.கர்ணன், குடும்ப நல நீதிபதி செல்வம், விரைவு மகளிர் நீதிமன்ற அமர்வு நீதிபதிஆனந்தன், தலைமை நீதித்துறை நடுவர் சரவணன், கூடுதல் சார்பு நீதிபதி மும்மூர்த்தி மற்றும் நீதித்துறை நடுவர் செந்தில்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

சாந்தி, சித்த மருத்துவர் வெங்கடேசன், இயற்கை மற்றும் யோகா மருத்துவர் முத்துக்குமார் மற்றும் மருத்துவ குழுவினர் நீதிபதிகளுக்கும், வழக்கறிஞர்களுக்கும், வழக்காடிகளுக்கும், நீதிமன்ற பணியார்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் மருத்துவப் பயன்கள் குறித்தான வாழ்வியல் முறைகள், யோகாசனங்கள், இயற்கை மருத்துவ முறைகள் பற்றி சிறப்புரையாற்றி, அலோபதி சிகிச்சை, ஹோமியோபதி சிகிச்சை, சித்த மருத்துவ சிகிச்சை குறித்தான விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேற்படி மருத்துவ முகாமில் 450 நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற உலக சுகாதார தினத்தை முன்னிட்டு இலவச மருத்துவ முகாமில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், வழக்காடிகள், நீதிமன்ற பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் சிகிச்சை பெற்று பயன் அடைந்தனர்.

Updated On: 8 April 2022 12:50 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  2. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  3. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  5. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  6. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  8. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  10. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.