/* */

ஆதிதிராவிடர்களுக்கு தாட்கோ மூலம் பொருளாதார மேம்பாட்டு திட்டம்

ஆதிதிராவிடர்களுக்கு தாட்கோ மூலம் பொருளாதார மேம்பாட்டு திட்டத்தில் பயனடைய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

HIGHLIGHTS

ஆதிதிராவிடர்களுக்கு தாட்கோ மூலம் பொருளாதார மேம்பாட்டு திட்டம்
X

தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் கீழ்கண்ட பொருளாதார மேம்பாட்டு திட்டங்களுக்கு தகுதியும், விருப்பமுள்ள ஆதிதிராவிட விண்ணப்பதாரர்களிடமிருந்து இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வயது வரம்பு 18 முதல் 65 வரை குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.3.00 இலட்சம் ஆகும்.

(அ) நிலம் வாங்கும் திட்டம், (ஆ) நிலம் மேம்பாடு திட்டம் - கிணறு, ஆழ்துளை கிணறு அமைத்தல், (இ) துரித மின் இணைப்பு திட்டம்.தொழில் முனைவோர் திட்டம் (அ) பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு சில்லரை விற்பனை நிலையம் அமைத்தல், (ஆ) தொழில் முனைவோர் திட்டம். (அ) இளைஞர்களுக்கான சுய வேலை வாய்ப்புத்திட்டம், (ஆ) மருத்துவமையம், மருந்தியல், கண் கண்ணாடியகம், முடநீக்கு மையம், இரத்தபரிசோதனை நிலையம் அமைத்தல் மற்றும் மேம்படுத்துதல். சுய உதவிக் குழுக்களுக்கான பொருளாதார கடனுதவி திட்டம் - திட்டத் தொகையில் 50 சதவீதம் மானியம் அல்லது அதிகபட்சம் மானியம் ரூ.2.50 இலட்சமாகும். தாட்கோ இணையதள முகவரி http://application.tahdco.com மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்தினை படியிறக்கம் செய்தோ, நகலினையோ, கைப்பிரதி, விண்ணப்பங்களையோ சமர்ப்பிக்க வேண்டியதில்லை. விண்ணப்பிக்கும் போது விண்ணப்பதாரர் பற்றிய முழு விவரங்கள், புகைப்படம், இருப்பிடச்சான்றிதழ் சாதி சான்றிதழ் (எண், வழங்கப்பட்ட நாள், வழங்கியவர் மற்றும் வழங்கப்பட்ட அலுவலகம்), குடும்ப ஆண்டு வருமான சான்றிதழ் (எண். வழங்கப்பட்ட நாள் வழங்கப்படுவதற்கான காரணம்), வருமானச் சான்றின் வயது 1 1ஃ2 ஆண்டுக்குள் பெற்றிருக்கவேண்டும்), பட்டா, சிட்டா (நிலம் வாங்குதல் மற்றும் நிலம் மேம்பாடு திட்டம்), குடும்ப அட்டை எண், ஆதார் எண், விண்ணப்பதாரரின் தொலைபேசி, கைபேசி எண், விண்ணப்பதாரரின் மின்னஞ்சல் முகவரி (ந.அயடை யனனசநளள), திட்டங்களின் விவரங்கள் முதலியவற்றை இணையதளத்தில் கண்டிப்பாக பதிவு செய்யவேண்டும்.

வ.எண், 01 முதல் 10 வரை உள்ள விவரங்கள் இன்றியமையாதவை, தொலைபேசி, கைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி இல்லாதவர்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்படும், மேற்குறிப்பிட்ட ஆவணங்கள் தவிர, திட்டங்களுக்கு ஏற்றாற்போல் தேவைப்படும் ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் இணையதளம் மூலம் 24 மணி நேரமும் பதிவு செய்யலாம். மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். கூடுதல் விபரங்கள் பெற அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள அறை எண்.225, இரண்டாவது தளம், தாட்கோ, மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகவும் (தொ.பே.எண்.04329 - 228315) .

இந்த வாய்ப்பினை ஆதிதிராவிடர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Updated On: 20 Aug 2022 6:05 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    10 பெண்புலிக்கு நடுவில் ஒரு நரி Veeralakshmi பகீர் !#police...
  2. வீடியோ
    🤣எந்த நேரத்துல எந்த Stunt அடிக்கிறதுனு தெரியல😂!#annamalai...
  3. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  4. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  5. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  6. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  7. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  8. கோவை மாநகர்
    கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை
  9. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  10. கோவை மாநகர்
    கோவை சிறையில், சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ்...