/* */

அரியலூர் கொரோனா கட்டுப்பாட்டு அறை மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி ஆய்வு

அரியலூரில் கொரோனா கட்டுப்பாட்டு அறையை மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

அரியலூர் கொரோனா கட்டுப்பாட்டு அறை மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி ஆய்வு
X

அரியலூர் கொரோனா கட்டுப்பாட்டு அறையை கலெக்டர் ரமண சரஸ்வதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா நோய் தொற்று தொடர்பான அவசர தேவைகளுக்காக 24 மணிநேரமும் இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா நோய் தொற்று தொடர்பான அவசர தேவைகளுக்காக 24 மணிநேரமும் இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாட்டு அறையில், கொரோனா தொற்றின் 3-வது அலை ஏற்படும் பட்சத்தில் பொதுமக்களுக்கு தேவையான வசதிகளை மேற்கொள்ளும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பொதுமக்களிடமிருந்து வரப்பெறும் கோரிக்கைகள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்வது. கொரோனா தொற்று தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம், ஆலோசனைகள் வழங்குவது.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இருப்பு, படுக்கைகளின் எண்ணிக்கை குறித்த விபரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு, இதை பொதுமக்களின் பயன்படுத்திக்கொள்வதற்கான வசதிகள் ஏற்படுத்துவது ஆகியவை கட்டுப்பாட்டு மையத்தில் அதிகாரிகளால் கண்ட்ரோல் செய்யப்படுகிறது.

இந்த கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்விற்கு பின், மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்ததாவது,

தமிழக முதலமைச்சர் ஆணைக்கிணங்க அரியலூர் மாவட்டத்தில் போர்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதன் அடிப்படையில் கொரோனா நோய் தொற்று பரவல் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், மருத்துவ வள்ளுநர்களால் வரக்கூடிய காலங்களில் ஏற்படும் என எதிர்பார்க்கப்படும் கொரோனா தொற்றின் 3-வது அலையிலிருந்து பொதுமக்களை பாதுகாத்திடும் வகையில் அதற்கு தேவையான மருத்துவ வசதிகள் ஏற்பட்டுத்தப்பட்டு வருகின்றன.

அதன் அடிப்படையில், கொரோனா நோயால் பாதிக்கப்படும் நபர்களுக்காக உரிய சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவ கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

மேலும், அவசர உதவி தேவைப்படும் நபர்களின் வசதிகளுக்காகவும், கொரோனா நோய் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் தகவல்களுக்காகவும் மாவட்ட ஆட்சியரகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.

இக்கட்டுப்பாட்டு அறை மூலமாக நோயாளிகளுக்கு தேவைப்படும் ஆக்சிஜன் விநியோகம் குறித்தும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கை வசதி மற்றும் மருந்துபொருட்கள் இருப்பு விபரங்கள் குறித்தும், மருத்துவமனைகளில் நோயாளிகளின் தேவைகள் குறித்தும் கேட்டறிந்து, அவை நிறைவேற்ற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும், மருத்துவமனைகளில் தேவையான படுக்கை வசதிகள் மற்றும் மருந்துபொருட்கள் இருப்பு குறித்தும், கொரோனா தடுப்பு மருந்து இருப்பு மற்றும் பயன்பாடு குறித்தும், கொரோனா பராமரிப்பு மையத்தில் நோயாளிகளின் மருத்துவ பரிசோதனை செய்த விபரங்கள் குறித்தும், நோயாளிகளின் உணவு மற்றும் சுகாதார தேவைகள் குறித்த தேவைகளுக்காகவும், கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்கள் குறித்தும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் இச்சேவை 24 மணி நேரமும் செயல்பட்டு வருகின்றன.

எனவே, பொதுமக்கள் அனைவரும் இக்கொரோனா நோய் தொற்று தொடர்பான சந்தேகங்கள், மருத்துவ உதவிகள், கோவிட் தடுப்பூசி ஆலோசனைகள், வீட்டில் தனிமைப்படுத்துவது தொடர்பான ஆலோசனை, கோவிட் பரிசோதனை கூடங்கள் தொடர்பான விபரங்கள்,

அவசர உதவி, மருத்துவமனைகளில் படுக்கை இருப்பு நிலவரம் உள்ளிட்ட அனைத்து விதமான தகவல்களுக்கும் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறையினை 1077, 1950 என்ற எண்ணிலும், 04329-228709, 299992 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், 9499933828 என்ற வாட்சப் எண்ணிலும், 9952336840, 8489551950 என்ற கைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

மேலும், பொதுமக்கள் கொரோனா பெருந்தொற்று காலத்தில் கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் முககவசம் அணிதல், சமூக இடைவெளியினை பின்பற்றுதல் மற்றும் சோப்பு போட்டு கைகளை சுத்தம் செய்தல் போன்ற பழக்கங்களை தொடர்ந்து கடைபிடிப்பதன் மூலம் கொரோனா நோய் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளலாம் என மாவட்ட மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்தார்

Updated On: 22 July 2021 12:52 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒருமனதான திருமண தம்பதிக்கு வாழ்த்து..!
  2. வந்தவாசி
    வக்கீலை தாக்கிய காவல் துணை ஆய்வாளர் இடமாற்றம்
  3. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் சூறைக் காற்றுக்கு 3 லட்சம் வாழை மரங்கள் சேதம்
  4. இந்தியா
    டெல்லியில் வருகிற 21ம் தேதி காவிரி நதி நீர் மேலாண்மை ஆணைய குழு
  5. வீடியோ
    10 பெண்புலிக்கு நடுவில் ஒரு நரி Veeralakshmi பகீர் !#police...
  6. வீடியோ
    🤣எந்த நேரத்துல எந்த Stunt அடிக்கிறதுனு தெரியல😂!#annamalai...
  7. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  8. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  9. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  10. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்