/* */

அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் ஆங்கில இலக்கிய மன்ற நிறைவு விழா

ஆங்கில இலக்கியம் பயில்வதன் மூலம் நிறைய வேலை வாய்ப்புகள் பெறலாம்

HIGHLIGHTS

அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் ஆங்கில இலக்கிய மன்ற நிறைவு விழா
X

பூம்புகார் கல்லூரியின் ஆங்கிலத்துறை உதவிப் பேராசிரியர் எஸ்.சிவராஜா பங்கேற்று பேசினார்

அரியலூர் அரசு கலைக்கல்லூரியில், ஆங்கில இலக்கிய மன்ற நிறைவு விழா ஆங்கிலத்துறை சார்பில் நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் ஜெ.மலர்விழி தலைமை வகித்தார். மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் கல்லூரியின் ஆங்கிலத்துறை உதவிப் பேராசிரியர் எஸ்.சிவராஜா பங்கேற்று, ஆங்கில இலக்கியம் மெய்த்தன்மைக்கு வழிவகுக்கிறது என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

அப்போது, ஆங்கில இலக்கியத்தின் மூலம் நடைமுறை வாழ்க்கைக்கு தேவையான நல்ல பல பயன்பெறமுடியும். ஆங்கில இலக்கியம் பயில்வதன் மூலம் நிறைய வேலை வாய்ப்புகள் பெறலாம். இவை அனைத்தும் அரசு கல்லூரியில் பயிலும் உங்களால் மட்டுமே முடியும் என்றார். விழாவில் ஆங்கிலத்துறை மாணவர்கள், அனைத்து துறைத்தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக ஆங்கிலத் துறைத் தலைவர் டோமினிக் அமல்ராஜ் வரவேற்றார். நிறைவாக ஆங்கிலத் துறை மூன்றாமாண்டு மாணவி ஹரிணி நன்றி கூறினார்

Updated On: 30 April 2022 11:46 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    4ம் கட்டமாக 96 நாடாளுமன்ற தொகுதி, ஆந்திர சட்டசபைக்கு நாளை தேர்தல்
  2. கல்வி
    கல்லூரி சேர்க்கையில் வெளிமாநில மாணவர்களால் பாதிப்பா?
  3. நாமக்கல்
    நீர்நிலைகளை மறைத்து சிப்காட்: தடுப்பு அணையில் நின்று விவசாயிகள்...
  4. தொழில்நுட்பம்
    இ-காமர்ஸ் சுரண்டல் அட்டை..! புதிய மோசடி..! உஷார் மக்களே..!
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. லைஃப்ஸ்டைல்
    மனம் விட்டுப் பேசு... மனமே லேசு!
  8. லைஃப்ஸ்டைல்
    உங்கள் மனைவியுடன் சண்டையிட்ட பிறகு சமாதானம் செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    அன்னையை போற்றுவோம்..! நேர்காணும் கடவுள்..!
  10. கல்வி
    ஆன்லைனில் கல்லூரி சேர்க்கை: மாணவர்களுக்கான விழிப்புணர்வு