/* */

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செஸ் ஒலிம்பியாட் செல்பி பாய்ண்ட்

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செஸ் ஒலிம்பியாட் செல்பி பாய்ண்ட் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செஸ் ஒலிம்பியாட் செல்பி பாய்ண்ட்
X

‘செல்பி பாய்ண்டில்’ செல்பி எடுத்துக்கொண்டார் அரியலூர் மாவட்ட வருவாய் அதிகாரி கலைவாணி.

சென்னை மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி 28.07.2022 முதல் 10.08.2022 வரை நடைபெறவுள்ளது. செஸ் ஒலிம்பியாட் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அரியலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக இன்றைய தினம் அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு தன் புகைப்படம் (Selfie Point) எடுப்பதற்கான அமைப்பில் மாவட்ட வருவாய் அலுவலர் ம.ச.கலைவாணி தன் புகைப்படம் எடுத்து, துவக்கி வைத்தார்.

மேலும், இந்த தன் புகைப்படம் எடுப்பதற்கான அமைப்பில் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் ஆர்வமுடன் தன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்த அமைப்பில் 'இது நம்ம சென்னை நம்ம செஸ் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கியுள்ளது. இதேபோன்று நாளை 44-வது செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணியும், தொடர்ந்து நாளை மறுநாள் மாரத்தான் போன்ற பல்வேறு நிகழ்வுகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடத்தப்படவுள்ளது.

இந்நிகழ்ச்சியில், அரியலூர் நகர்மன்றத் தலைவர் க.சாந்தி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரத்திட்ட அலுவலர் சிவக்குமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் லெனின் மற்றும் பொதுமக்கள், அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 19 July 2022 7:56 AM GMT

Related News

Latest News

  1. நீலகிரி
    ஊட்டியில் மலர் கண்காட்சி நாளை தொடக்கம்: ஏற்பாடுகள் தீவிரம்
  2. இந்தியா
    விமான நிறுவன ஊழியர்கள் 30 பேர் பணிநீக்கம்: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்...
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. நாமக்கல்
    எஸ்.வாழவந்தி செல்லாண்டியம்மன் கோயில் தேர்த்திருவிழா: திரளான பக்தர்கள்...
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. தேனி
    அரசு மருத்துவமனையின் அவலம்! இங்கில்ல… மத்திய பிரதேசத்தில்…!
  7. தேனி
    அம்பானி, அதானியிடம் இருந்து எவ்வளவு பணம் வாங்கினீர்கள்? பிரதமர்...
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. திருவண்ணாமலை
    இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான கோவில் நிலம் மீட்பு!
  10. இந்தியா
    சபரிமலையில் 'ஸ்பாட் புக்கிங்' வசதி ரத்து!