/* */

மாற்றுத்திறனாளிகள் வாழ்நாள் சான்று ஒப்படைத்து உதவித்தொகையை பெற அழைப்பு

மாற்றுத்திறனாளிகளை சார்ந்தவர்கள் வாழ்நாள் சான்று ஒப்படைத்து நிதியாண்டிற்கான உதவித்தொகையை தொடர்ந்துபெற மாவட்ட கலெக்டர் அறிவிப்பு.

HIGHLIGHTS

மாற்றுத்திறனாளிகள் வாழ்நாள் சான்று ஒப்படைத்து உதவித்தொகையை பெற அழைப்பு
X

பைல் படம்.

இதுகுறித்து அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:

அரியலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலமாக மாதந்தோறும் ரூ.2000 பெறும் மாற்றுத் திறனாளிகளை சார்ந்தவர்கள் வாழ்நாள் சான்று ஒப்படைத்து 2022-2032ஆம் நிதியாண்டிற்கான உதவித்தொகையை தொடர்ந்து பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் வாயிலாக மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் மனவளர்ச்சி குன்றியோர், தசைசிதைவு நோயால் பாதிக்கப்பட்டோர், தொழுநோயால் பாதிக்கப்பட்டோர் மற்றும் 75 சதவிதம் அதற்கு மேல் கைகள் கால்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டோர் மற்றும் தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை ரூ.2000/- வழங்கப்பட்டு வருகிறது.

அரியலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலமாக மாதந்தோறும் ரூ.2000/- பெறும் மாற்றுத் திறனாளிகளை சார்ந்தவர்கள் வாழ்நாள் சான்று படிவத்தில் கிராம நிர்வாக அலுவலரின் சான்றொப்பத்துடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், அறை எண்:17, தரைத்தளம், அரியலூர்-612704 என்ற முகவரிக்கு நேரில் வந்து 25.06.2022 க்குள் சமர்பித்து 2022-2023ஆம் நிதியாண்டிற்கான உதவித்தொகையை மாதந்தோறும் தொடர்ந்து பெற்று பயனடையுமாறும், வாழ்நாள் சான்று வழங்காத மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை தொடர்ந்து வழங்கயியலாது என அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Updated On: 7 Jun 2022 8:57 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  2. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  4. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  5. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  6. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  7. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  8. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  9. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  10. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!