/* */

அரியலூர் அருகே உயிரை கையில் பிடித்துகொண்டு ஊருக்கு மின்சாரம் தொடர வழிவகுத்த இளைஞர்கள்

அரியலூர் அருகே இளைஞர்கள் இணைந்து காற்றால் மின் பாதையில் ஏற்பட்ட இடர்பாடுகளை நீக்கி கிராமத்துக்கு மின் வசதி தொடர வழி வகுத்தனர்.

HIGHLIGHTS

அரியலூர் அருகே உயிரை கையில் பிடித்துகொண்டு ஊருக்கு மின்சாரம் தொடர வழிவகுத்த இளைஞர்கள்
X

அரியலூர் மாவட்டம் அருகே மின் பாதைகயில் ஏற்பட்ட சிக்கல்களை சரி செய்த கிராமத்து இளைஞர்கள்.

அரியலூர் மாவட்டம் அரியலூர் ஒன்றியம் தேளூர் மின்நிலையத்திற்கு உட்பட்ட ஆண்டிப்பட்டாக்காடு ஊராட்சி வள்ளக்குளம் கிராமத்தில் சுமார் 10 இடங்களில் மின்கம்பிகள் தாழ்வா செல்கின்றன.

அதிக காற்றடிக்கும் நேரங்களில் மின்கம்பிகள் ஒன்றோடு ஒன்று இணைந்து விடும்போது மின்தடை ஏற்படுகின்றது. இதனால் மின்தடை குறைபாடு குறித்து பலமுறை மின்சார வாரியத்திடம் புகார் அளித்தும் இதுவரை மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனையடுத்து வள்ளக்குளம் இளைஞர்கள் ஒன்றினைந்து உயிரை கையில்பிடித்துகொண்டு தாங்களாகவே மின்சார பாதையை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். தாழ்வாக சென்ற மின்கம்பிகளுக்கு இடையே குச்சி வைத்து கட்டிய இளைஞர்கள் இதற்காக லாரிமீது நின்றும், சில இரண்டு ஏணிகளை சாய்வாக நிறுத்தியும், அதன்மீது ஏறிநின்று மின்பாதையில் தடைஏற்படாத நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

மின் கம்பங்களுக்கு இடையே அதிக இடைவெளி உள்ளதால் மின் கம்பிகள் தாழ்வான நிலையில் உள்ளது. மின்சாரத்துறை இடைவெளியை குறைக்க மின்கம்பங்களை நடவேண்டும் என்பது இவ்வூர் இளைஞர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

துனிச்சலாக உயிரை பனையம் வைத்து மின்கம்பிகளுக்கு இடையே குச்சியை கட்டி கிராமத்தில் மின்தடை ஏற்படாதவாறு செயல்பட்ட இளைஞர்களுக்கு அக்கிராம மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Updated On: 27 May 2021 3:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  2. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  4. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...
  5. வீடியோ
    தமிழகத்தை கலக்கிய வினோத கல்யாணம் | தமிழர்கள் ஊர் கூடி வாழ்த்து !...
  6. லைஃப்ஸ்டைல்
    தள்ளாடும் வயதுவரை ஒன்றாகும் உறவு கணவன்-மனைவி..!
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 43 அரசு பள்ளிகள்
  8. வீடியோ
    Amethi-யிலிருந்து Raebareli-க்கு ஏவப்பட்ட பிரம்மாஸ்தரம் | தூள்...
  9. லைஃப்ஸ்டைல்
    தொப்புள்கொடி பிணைக்கும் பாச அலைக்கற்றை, சகோதரி பாசம்..!
  10. ஈரோடு
    ஈரோட்டில் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் மழை, மக்கள் நலன் வேண்டி...