/* */

அரியலூர்: உள்ளாட்சித் தேர்தலில் 3 மணி வரை 68.31 % வாக்குகள் பதிவு

அரியலூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் மதியம் 3மணி நிலவரப்படி 68.31% வாக்குகள் பதிவாகி இருந்தன.

HIGHLIGHTS

அரியலூர்: உள்ளாட்சித் தேர்தலில் 3 மணி வரை 68.31 % வாக்குகள் பதிவு
X

அரியலூர் மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில், ஆர்வமுடன் வாக்களிக்க வீல் சேரில் வந்த மூதாட்டிக்கு, போலீசார்  உதவினர்.

அரியலூர் மாவட்டத்தில் 3 கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் 13 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என, மொத்தம் 16 பதவி இடங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் செந்துறை ஒன்றியம் – கீழமாளிகை, ஜெயங்கொண்டம் ஒன்றியம் - உட்கோட்டை, ஆண்டிமடம் ஒன்றியம் - அழகாபுரம் மற்றும் நாகம்பந்தல் ஆகிய 4 வார்டு உறுப்பினர் பதிவி இடங்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

இன்று, ஆண்டிமடம் ஒன்றியம் ஓலையூர், தா.பழூர் ஒன்றியம், மனகெதி மற்றும் நாயகனைப்பிரியாள் ஆகிய 3 ஊராட்சிகளுக்கு தலைவர் பதவி இடங்களுக்கும், ஆண்டிமடம் ஒன்றியம் ஓலையூர், தா.பழூர் ஒன்றியம், மனகெதி மற்றும் நாயகனைப்பிரியாள் ஊராட்சிகளுக்கு தலைவர் பதவி இடங்களுக்கும், அரியலூர் - ஓட்டக்கோவில் (வார்டு 6), திருமானூர் - வெற்றியூர் (வார்டு 6), கோவிலூர் (வார்டு 1), செந்துறை - தளவாய் (வார்டு 9), சிறுகடம்பூர் (வார்டு 3), ஜெயங்கொண்டம் - ஜெ.தத்தனூர் (வார்டு5), ஆண்டிமடம் - இடையக்குறிச்சி (வார்டு 2), இலையூர் (வார்டு 9), தா.பழூர் - அம்பாபூர் (வார்டு 8) ஆகிய 9 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு என, மொத்தம் 12பதவியிடங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது.

அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், தா.பழூர் ஆகிய ஒன்றியங்களில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி ஆர்வத்தோடு, பொது மக்கள் உற்சாகமாக வாக்களித்து வருகின்றனர். இன்று நடைபெறும் தேர்தலில் 5669 ஆண் வாக்காளர்களும், 5663 பெண் வாக்காளர்களும் சேர்த்து 16,332 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றனர். இன்று மதியம் 3 மணி நிலவரப்படி 3665 ஆண் வாக்காளர்களும், 4076 பெண் வாக்காளர்களும் சேர்த்து 7741 வாக்காளர்கள் வாக்களித்திருந்தனர்.

அரியலூர் ஒன்றியத்தில் 74.94 % வாக்குகளும், திருமானூர் ஒன்றியத்தில் 80.42 % வாக்குகளும், செந்துறை ஒன்றியத்தில் 54.85 % வாக்குகளும், ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் 75.28 % வாக்குகளும், ஆண்டிமடம் ஒன்றியத்தில் 67.94% வாக்குகளும், தா.பழூர் ஒன்றியத்தில் 67.62% வாக்குகளும் சேர்த்து, மாவட்டம் முழுவதும் 68.31% வாக்குகள் பதிவாகியுள்ளன.

Updated On: 9 Oct 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  3. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  5. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  6. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு
  8. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில், பலத்த மழை: சாலைகளில் மழைநீர்!
  9. குமாரபாளையம்
    10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி மாணவ,...
  10. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...