/* */

அரியலூர் மாவட்டத்தில் நாளை 12 இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்

அரியலூர் மாவட்டத்தில் நாளை 12 இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டத்தில் நாளை 12 இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்
X

அரியலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக நாளை அரியலூர் மாவட்டத்தில் 12 இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகின்றது.

அரியலூர் ஊராட்சி ஒன்றிய பகுதியில் சுண்டக்குடி ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் ஆலந்துறையார் கட்டளை கிராமத்தில் கிராம சேவை மையத்தில் காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரை தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. கடுகூர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் சீனிவாசபுரம் கிராம சேவை மையத்தில் காலை 11.30 மணி முதல் மதியம் 2 மணி வரை தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

திருமானூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் ஏலாக்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் கோவிலூர் கிராம சேவை மையத்தில் காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரையிலும், குருவாடி ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் கோமான் கிராம சேவை மையத்தில் காலை 11.30 மணி முதல் 2 மணி வரை சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

செந்துறை ஊராட்சி ஒன்றிய பகுதியில் குமுழியம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நாகல்குழி கிராம சேவை மையத்தில் காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரையிலும், இரும்புலிக்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் ஆதனக்குறிச்சி கிராம சேவை மையத்தில் காலை 11.30 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் வெட்டியார்வெட்டு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் பிச்சனூர் கிராம சேவை மையத்தில் காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரையிலும், சலுப்பை கிராம சேவை மையத்தில் காலை 11.30 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் அணிக்குறிச்சான் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கூவத்தூர் கிராம சேவை மையத்தில் காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரையிலும், கொடுக்கூர் கிராம சேவை மையத்தில் காலை 11.30 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

தா.பழூர் ஊராட்சி ஒன்றிய பகுதியில் உதயநத்தம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கோடாலிக்கருப்பூர் கிராம சேவை மையத்தில் காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரையிலும், கோடங்குடி கிராம சேவை மையத்தில் காலை 11.30 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

Updated On: 29 May 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?