/* */

அரியலூர்: வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு

அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 31.05.2022-க்குள் சமர்ப்பிக்கவும்.

HIGHLIGHTS

அரியலூர்: வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு
X

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில், அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறுவதற்கு பத்தாம் வகுப்பு கல்வித்தகுதி தேர்ச்சி பெறாத, தேர்ச்சி பெற்றவர்கள், பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பட்ட படிப்பு தேர்ச்சி பெற்ற பொதுபிரிவினர் தங்களது கல்வித்தகுதியை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்து (5) ஆண்டுகள் முடிவடைந்து தொடர்ந்து புதுப்பித்திருக்க வேண்டும். மாற்றுத்திறனாளி பதிவு தாரர்கள் பத்தாம் வகுப்பு கல்வித்தகுதி தேர்ச்சி பெறாத, தேர்ச்சி பெற்றவர்கள் முதல் பட்டபடிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் வரை தங்களது கல்வித்தகுதியை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து ஓராண்டு முடிவடைந்திருக்க வேண்டும்.

31.03.2022 அன்று தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பினர் 45 வயதிற்குள்ளும், இதரப்பிரிவினர் 40 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும் மாற்றுத்திறனாளி மனுதாரர்களுக்கு உச்ச வயதுவரம்பு ஏதும் இல்லை. விண்ணப்பதாரர் எந்தவொரு கல்வி நிறுவனத்திலும் கல்வி பயிலுபவராக இருத்தல் கூடாது. ஆனால், தொலை தூர கல்வி பயிலுபவராக இருக்கலாம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளி மனுதாரர்களுக்கு வருமான உச்ச வரம்பு ஏதும் இல்லை. வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டத்திற்குரிய விண்ணப்ப படிவத்தினை அலுவலக வேலைநாட்களில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டையுடன் நேரில் வந்து இலவசமாக பெற்றுகொள்ளலாம் அல்லது https://tnvelaivaaippu.gov.in/downloads/uaApplication.pdf- என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்திட்டம் தொடர்பான அனைத்து விவரங்களும் மேற்படி இணையதளத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 31.05.2022-க்குள் அனைத்து அசல் கல்வி சான்றுகள் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, குடும்பஅட்டைஇ ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தகத்துடனும், மாற்றுத்திறனாளிகளை பொருத்தவரையில் மேற்படி சான்றுகளுடன் மாற்றுதிறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையுடனும் நேரில் வருகை புரிந்து விண்ணப்ப படிவத்தினை சமர்ப்பிக்கவும். மேலும், ஏற்கனவே வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற்று மூன்றாண்டு முடிவுற்ற பொதுபிரிவினரும் பத்தாண்டுகள் முடிவுற்ற மாற்றுத்திறனாளிகளும் ஏற்கனவே, வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற்று வருபவர்களும் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டியதில்லை. தற்போது உதவித்தொகை பெற்று வரும் பயனாளிகள் சுயஉறுதிமொழி ஆவணத்தினை பூர்த்திசெய்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Updated On: 6 April 2022 7:06 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!
  3. திருவண்ணாமலை
    விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் தற்கொலை முயற்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை: உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உன்னத நாள்
  5. ஆன்மீகம்
    அன்பிற்கும் அமைதிக்கும் வழிவகுக்கும் ரமலான்
  6. ஆரணி
    பாலியல் தொல்லை வழக்கில் விடுதி வார்டனுக்கு 20 ஆண்டு ஜெயில்!
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி பாலக்கரையில் உள்ள சிவாஜி சிலை சங்கிலியாண்டபுரத்திற்கு
  8. திருவள்ளூர்
    மகளிர் சுய உதவி குழு உறுப்பினர் தாக்கப்பட்டது பற்றி போலீஸ் விசாரணை
  9. க்ரைம்
    கரூர் அருகே விவசாய கிணற்றில் குளித்த 3 மாணவர்கள் நீரில் மூழ்கி...
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் அன்பில் தர்மலிங்கத்தின் 105 வது பிறந்த நாள் விழா