/* */

அரியலூரில் சாராயம் காய்ச்சிய 16 பேரை போலீசார் கைது செய்தனர்

அரியலூரில் சாராயம் காய்ச்சிய 16 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

HIGHLIGHTS

அரியலூரில் சாராயம் காய்ச்சிய 16 பேரை போலீசார் கைது செய்தனர்
X

அரியலூரில் கடந்த3 நாட்களாக சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்த 16 பேரை போலீசார் கைது செய்தனர்.

அரியலூர் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் சாராயம் காய்ச்சியதாக 16பேர் போலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் பலப்பகுதிகளிலும் சாராயம் காய்ச்சப்படுவதாக போலிசாருக்கு கிடைக்கு தகவலின் பேரில் கைதுவேட்டை தொடர்கிறது.

கொரோனா தொற்றின் பரவல் காரணமாக தமிழக அரசு தளர்வில்லா ஊரடங்கை செயல்படுத்தி வருவதால் அரசு மதுபான கடைகள் திறக்கப்படவில்லை. இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட பழைய சாராயம் காய்ச்சும் தொழில் செய்பவர்கள் மீண்டும் ஊறல்போடும் பணியை செவ்வன செய்யத்தொடங்கியுள்ளனர். மாவட்டத்தின் பலப்பகுதிகளிலும் சாராய ஊறல் போடப்பட்டு விற்பனை நடைபெறுவதாக போலிசாருக்கு தகவல் கிடைத்து வருகிறது. இதனையடுத்து அரியலூர் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் சாராயம் காய்ச்சிய 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறிப்பாக அரியலூர் மாவட்டம் மலத்தான்குளம் கிராமத்தில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்த வேளாங்கண்ணி ராபர்ட்,பாலகுமார்,சக்தி துரை,அருள் பிரசாத், கரண், மோகன்ராஜ், மார்க்கண்டேயன்,விஜய் ஆகிய 9 பேரை கைது செய்தனர். அதில் மூன்றுபேர் கல்லூரி மாணவர்கள். அவர்களிடம் இருந்து 200 லிட்டர் ஊறல் மற்றும் 10 லிட்டர் சாரயத்தை பறிமுதல் செய்தனர்.

அதேபோல் ஜெயங்கொண்டம் அருகே வீரனார்கோவில் பகுதியில் முந்திரி காட்டில் சாராயம் காய்ச்ச போடப்பட்ட ஊறலை பூமியில் இருந்து எடுத்து போலிசார் அழித்தனர். இதில் வினோத், மகாதேவன், வெற்றிவேல், தமிழ்ச்செல்வன், செல்வம் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

இன்று கோவில்எசனை கிராமத்தில் சாராயம் காய்ச்சிய மார்டின், சப்பாணி ஆகிய 2பேரை போலிசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 200 லிட்டர் ஊறல் மற்றும் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

மாவட்டத்தின் பலப்பகுதிகளிலும் சாரய ஊறல்கள் பெருக்கெடுத்துள்ள நிலையில் போலிசாரும் அதிரடி காட்டி சாராயம் காய்ச்சுபவர்களை கைதுசெய்து வருகின்றனர். ஆனால் உயிர் இழப்புகள் வரும்முன்னர் கள்ளச்சாராயத்தை முற்றிலும் அழிக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

Updated On: 2 Jun 2021 5:40 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  3. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  4. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  6. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  7. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  9. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  10. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?