/* */

அரியலூர் மாவட்டத்தில் மேலும் 2 நேரடி கொள்முதல் நிலையங்கள் திறப்பு

அரியலூர் மாவட்டத்தில் மேலும் 2 நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்து உள்ளார்.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டத்தில் மேலும் 2  நேரடி கொள்முதல் நிலையங்கள் திறப்பு
X

அரியலூர் மாவட்டத்தில் புதிதாக திறக்கப்பட்ட நேரடி நெல்கொள்முதல் நிலையத்தை கலெக்டர் ரமண சரஸ்வதி பார்வையிட்டார்.

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அரியலூர் மாவட்டத்தில் 2021-2022 -ஆம் ஆண்டில் கரீப் சாகுபடி குறுவை பருவத்தில் நடைபெறும் அறுவடையை முன்னிட்டு, விவசாயிகள் பயன்பெறும் வகையில், இரண்டாம் கட்டமாக, அரியலூர் வட்டத்தில், குலமாணிக்கம் மற்றும் அழகியமணவாளன் ஆகிய கிராமங்களில், இன்று முதல் நேரடி கொள்முதல் நிலையம் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட குலமாணிக்கம் மற்றும் அழகியமணவாளன் ஆகிய கிராமங்களில், நேரடி கொள்முதல் நிலையம் பயன்பாட்டிற்கு வர உள்ளதால், அருகில் உள்ள விவசாயப் பெருமக்கள், நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை பயன்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Updated On: 6 Oct 2021 4:27 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலையில் தண்ணீரின்றி வறண்ட பஞ்சலிங்க அருவி; ஏமாற்றத்தில் சுற்றுலா ...
  2. திருப்பூர்
    திருப்பூர்; 4 மையங்களில் 'நீட்' தேர்வெழுதிய மாணவ மாணவியர்
  3. ஆன்மீகம்
    சாய்பாபாவின் காலமற்ற ஞானம் - ஒரு வழிகாட்டும் ஒளி!
  4. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது!
  5. லைஃப்ஸ்டைல்
    ‘நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே...’
  6. லைஃப்ஸ்டைல்
    புலிக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இரு..!
  7. லைஃப்ஸ்டைல்
    கர்ப்பம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  8. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 14 அரசு பள்ளிகள் உள்பட 60...
  9. நாமக்கல்
    நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம்...
  10. லைஃப்ஸ்டைல்
    யாரையும் நம்பாதே: சிறந்த 50 தமிழ் மேற்கோள்கள்!