/* */

ஆண்டிமடம்,திருமானூர் அரசுபள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்புமுகாம்

Abled Person - அரியலூர் மாவட்டத்தில் 25ம்தேதி மற்றும் 26ம்தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

ஆண்டிமடம்,திருமானூர் அரசுபள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்புமுகாம்
X

பைல் படம்


Abled Person -அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழக அரசு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் வழங்கப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெற்றவர்களுக்கு, பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. மேலும் மத்திய அரசினால் மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தின் தொலை தூரங்களில் இருந்து அடையாள அட்டை பெற வரும் மாற்றுத்திறனாளிகளின் சிரமங்களை குறைக்கும் வகையில் அடையாள அட்டை வழங்க குறுவட்ட அளவில் 20 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.

25.08.2022 அன்று ஆண்டிமடம் ஒன்றியத்தில் ஆண்டிமடம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைப்பெறவுள்ளது.26.08.2022 அன்று திருமானுர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் சிறப்பு முகாம் நடைப்பெறவுள்ளது.இம்முகாம் காலை 10 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடைப்பெறும்.

இம்முகாமில் எலும்பு முறிவு மருத்துவர், மன நல மருத்துவர் மற்றும் கண் மருத்துவர் காது மூக்கு தொண்டை மருத்துவர் ஆகிய அரசு மருத்துவர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து மருத்துவச்சான்று வழங்க உள்ளார்கள். மேற்படி மருத்துவ அலுவலர் வழங்கும் சான்றிதழின் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் திருமானுர் மற்றும் ஆண்டிடம் ஒன்றியங்களில் உள்ள அனைத்து கிராமங்கள் மற்றும் நகரப்பகுதிகளைச் சேர்ந்த இதுநாள் வரை மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை மற்றும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் மட்டும் ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-5 மற்றும் இதற்கு முன் சிகிச்சை பெற்ற ஆவணங்களுடன் வந்து கலந்துகொண்டு பயன்பெறலாம். முகாமிற்கு வரும் மாற்றுத்திறனாளிகள் கட்டாயம் முக கவசம் அணிந்து வரவேண்டும். சமூக இடைவெளி கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

அரியலூர் மாவட்டத்தில் திருமானுர் மற்றும் ஆண்டிடம் ஒன்றியங்களில் நடைபெற்ற முகாமில், கலந்துகொள்ளாத மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை மற்றும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெறாதவர்கள் மட்டும் உரிய ஆவனங்களுடன் மாற்றுத்திறனாளிகள் நேரில் வந்து கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 24 Aug 2022 11:11 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    சோழவந்தானில், தனியார் பள்ளியில் சலுகைகளுடன் மாணவர் சேர்க்கை..!
  2. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, அதிமுக சார்பில் இலவச மருத்துவ முகாம்..!
  3. வீடியோ
    🥳Adhi-யின் 25வது படம் கொண்டாட்டத்தில் PT Sir குழுவினர்🥳 !#hiphop...
  4. ஆன்மீகம்
    தன்மானம் சீண்டப்படும்போது..துணிந்து நில்லுங்கள்..!
  5. வீடியோ
    Shivaji Krishnamurthy பற்றிய கேள்விக்கு மழுப்பிய VeeraLakshmi...
  6. தேனி
    தேனி சமதர்மபுரம் நாடார் மண்டகப்படி திருவிழா..!
  7. லைஃப்ஸ்டைல்
    கருத்து கந்தசாமிகளே..நீங்களும் இதை படிங்க...!
  8. லைஃப்ஸ்டைல்
    விநாயகருக்குப் பிடித்த விருந்துகள்: சதுர்த்தி ஸ்பெஷல் படையல் செய்வது...
  9. வீடியோ
    😡🔥ஆம் அவர் சொன்னது உண்மை நான் பொருக்கி தான்😡🔥!#annamalai...
  10. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்