/* */

கள்ள சாராயம் விற்பனை: 6 நபர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைப்பு..!

அரியலூர் மாவட்டத்தில் கள்ளசாராய ஊறல் விற்பனை ஆகிய குற்றங்களில் ஈடுபட்ட 6 நபர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டனர்.

HIGHLIGHTS

கள்ள சாராயம் விற்பனை: 6 நபர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைப்பு..!
X

அரியலூர் மாவட்டத்தில் கள்ள சாராய ஊறல் மற்றும் விற்பனை ஆகிய குற்றங்களில் ஈடுபட்ட 6 நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

அரியலூர் மாவட்டம் மலத்தான்குளம் கிராமத்தை சேர்ந்த 1) வேளாங்கண்ணி ராபர்ட் த/பெ ஆரோக்கியசாமி (34) மற்றும் 2) பாலகுமார் 22 த/பெ செல்லையா ஆகிய இருவரும் சாராய ஊறல் போட்டு இருந்ததை தகவலறிந்த மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.மகாலட்சுமி அவர்கள் உதவி ஆய்வாளர் ரமேஷ் பாபு ராபர்ட் மற்றும் பாலகுமார் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர் .

மீன்சுருட்டி அருகே உள்ள ராமதேவ நல்லூரை சேர்ந்த கார்த்திக் (41) த/பெ ராஜேந்திரன் மற்றும் சுத்து குளம் கிராமத்தை சேர்ந்த விவேக் (30) த/பெ அன்பரசு ஆகியோரை மீன்சுருட்டி காவல் ஆய்வாளர் கண்ணதாசன் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தார்.

ஆண்டிமடம் அருகே உள்ள குளத்தூர் கிராமத்தை சேர்ந்த ரகுபதி (31) த/பெ ராஜவேல், என்பவர் சாராய ஊறல் போட்டிருந்ததை ஆண்டிமடம் காவல் ஆய்வாளர் குணசேகரன் தலைமையில் போலீசார் கைப்பற்றி அழித்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நபர்கள தொடர்ச்சியாக இது‌போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதனால் அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் K.பெரோஸ் கான் அப்துல்லா பரிந்துரை செய்தார்கள். பரிந்துரை ஏற்ற அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்னா குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.

தொடர் மணல் திருட்டில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது. ஜெயங்கொண்டம் அருகே ஆண்டிமடம் அடுத்த நெட்டலக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த பாரதி என்பவர் அடிக்கடி மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்ததால் ஆண்டிமடம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.K.பெரோஸ்கான் அப்துல்லா ஆகியோர் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் ரத்னா பாரதியை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனடிப்படையில் இவர்கள் 6 பேரையும் காவல்துறையினர் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Updated On: 16 Jun 2021 8:50 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  3. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  4. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  6. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  7. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  9. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  10. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?