/* */

அரியலூர் அருகே 500 கிலோ புகையிலை, குட்கா, ரூ.1.50 ரொக்கம் பறிமுதல்

வெளி மாவட்டத்தில் இருந்து குட்கா வாங்கி பொய்யாதநல்லூரில் வீட்டில் பதுக்கி வைத்து, கடைகளுக்கு விற்பனைசெய்வது தெரியவந்தது

HIGHLIGHTS

அரியலூர் அருகே  500 கிலோ புகையிலை, குட்கா,  ரூ.1.50  ரொக்கம்  பறிமுதல்
X

அரியலூர் டி.எஸ்.பி மதன் தலைமையில் காவலர்கள் குபேந்திரன் வீட்டில் நடத்திய சோதனையில் 500 கிலோ ஹான்ஸ் மற்றும் குட்காவை பறிமுதல் செய்தனர்.


அரியலூர் அருகே சட்டவிரோதமாக விற்பனைக்கு பதுக்கி வைத்த 500 கிலோ புகையிலை, குட்கா மற்றும் ரூ. 1.50 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்து 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

அரியலூர் மாவட்டம், பொய்யாதநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் குபேந்திரன். இவர் அரியலூர் கடைகளில் ஹான்ஸ் மற்றும் குட்கா விற்பனைக்கு கொடுத்த போது, அரியலூர் டி.எஸ்.பி மதன் தலைமையில் போலீசார் குபேந்திரனை கைது செய்தனர்.

பின்னர், அவரிடம் விசாரணையில் ஈடுபட்ட போது, வெளி மாவட்டத்தில் இருந்து ஹான்ஸ் மற்றும் குட்கா வாங்கி பொய்யாதநல்லூரில் உள்ள வீட்டில் பதுக்கி வைத்து, அதனை கடைகளுக்கு விற்பனைக்கு கொடுப்பது தெரியவந்தது. இதனையடுத்து, அரியலூர் டி.எஸ்.பி மதன் தலைமையில், காவலர்கள் குபேந்திரன் வீட்டில் நடத்திய சோதனையில் 500 கிலோ ஹான்ஸ் மற்றும் குட்காவை பறிமுதல் செய்தனர். மேலும், குபேந்திரன் வீட்டில் ரூ. 1.50 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்த போலீசார், குபேந்திரன் மற்றும் பரூக் ஆகியோரை கைது விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.


Updated On: 9 Aug 2021 8:36 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  3. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  4. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  6. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  7. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  9. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  10. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?