/* */

பொடுகு வந்திருச்சா..? கவலைய விடுங்க..! வழி இருக்கு..வாங்க பார்க்கலாம்..!

Podugu Poga Tips -பொடுகுத்தொல்லைக்கு இப்போல்லாம் என்னென்னமோ சோப்பு, ஷாம்பு, மருந்துகள் வந்தாச்சு. ஆனாலும், நம்ம சொந்த மூலிகை மருந்துக்கு ஈடாகுமா?

HIGHLIGHTS

பொடுகு வந்திருச்சா..? கவலைய விடுங்க..! வழி இருக்கு..வாங்க பார்க்கலாம்..!
X

podugu poga tips in tamil-பொடுகு. (கோப்பு படம்)

Podugu Poga Tips -பொடுகு என்பது தலையில் இறந்த செல்கள் உதிர்வதைத் தான் பொடுகு என்று அழைக்கப்படுகிறது. இது சிறியவர், பெரியவர் என்று எல்லோருக்கும் வருகிறது. பொடுகு பிரச்னை எதனால் வருகிறது என்று பார்ப்போம்.

எண்ணெய் சருமம் இருப்பவர்களுக்கு மண்டையில் சுரக்கும் அதிகப்படியான எண்ணெய், தலையை சுத்தமாக வைத்திருக்காத காரணத்தாலும், தலைக்கு பயன்படுத்தும் ஷாம்பு அல்லது மற்ற அழகு சாதன பொருட்கள் கூட பொடுகு உண்டாவதற்கு காரணமாக அமைகின்றன. இதனை நிரந்தரமாக சரிசெய்ய வீட்டில் இருக்கும் பொருட்களே போதும். எப்டீன்னு பாருங்க.


  • நல்லெண்ணெயுடன் சம அளவில் எலுமிச்சைச் சாறு கலந்து வாரம் ஒரு முறை கூந்தலின் வேர்ப்பகுதி முதல் நுனி வரை நன்கு தடவி ஊறவிடவேண்டும். பின்னர் ஷாம்பு போட்டு அலசினால் பொடுகு தொல்லை தீரும்.
  • தயிர் ஒரு கப் அளவில் எடுத்து அதில் கால் டீ ஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து வாரம் 2 முறை தலையில் தடவி அலசினால் கூந்தல் பட்டுப் போல மின்னும். பொடுகு தொல்லையும் தீரும். மிளகுத் தூள் சேர்ப்பதால் குளிர்ச்சி ஏற்படாமல் உஷ்ணம் உடலை பாதுகாக்கும்.
  • ஷாம்பு பயன்பாட்டுக்கு முதல்நாளே ஊற வைத்த வெந்தயத்தை வடித்து அந்த தண்ணீரில் எலுமிச்சைச் சாறு கலந்து பேஸ்ட் போல் உருவாக்கினால் அது நுரைத்து வரும். அதையே ஷாம்புவாக பயன்படுத்தி 20 நிமிடம் ஊற வைத்து பின்னர் அலசினால், பொடுகு வராமல் இருக்கும். பொடுகுத் தொல்லை அதிகம் இருப்பவர்கள் ஷாம்பு பயன்பாட்டை தவிர்த்து இந்த முறையை பின்பற்றி நல்ல பலன் பெறலாம்.


  • கிரீன் டீ குடிப்பவர்கள் அந்த டீயில் சர்க்கரை சேர்க்காமல் வெறும் தேனீரில் துளசி இலைச்சாறு மற்றும் நெல்லிப் பொடி கலந்து அரை மணி நேரம் தலை முழுவதும் மசாஜ் செய்து தலையை அலசினால் பொடுகு முழுவதும் நீங்கி விடும்.
  • பொடுகுத் தொல்லை நீங்க முட்டையின் மஞ்சள் கரு சிறந்த பலனைத் தரும். மஞ்சள் கருவை உச்சந்தலையில் மசாஜ் செய்தவதுபோல நன்றாக தேய்த்து ஒரு மணி நேரம் வைத்திருக்கவேண்டும். பின்னர் கூந்தலை அலசினால், கூந்தல் எவ்வளவு வறண்டு போயிருந்தாலும் மென்மையாக மாறிவிடும். பொடுகுத் தொல்லை வரவே வராது. முட்டையின் வாடை பிடிக்காதவர்கள் வாடை போகும்வரை ஷாம்பு போட்டு அலசி விடுங்கள்.

  • அதிக பொடுகு தொல்லையால் அவதிப்படுபவர்கள் ஒருநாள் விட்டு ஒருநாள் கால் டீஸ்பூன் கிராம்புத் தூளுடன், 4 ஸ்பூன் தேன் கலந்து அதனுடன் பத்து பல் இடித்த பூண்டு சேர்த்து நன்கு மசித்து தலையில் நன்றாக அழுத்தி தேய்த்து மசாஜ் செய்தால் பொடுகு நீங்கும்.
  • பொடுகு, பேன் தொல்லைகள் இல்லாமல் இருக்க வேப்ப இலைகளை விழுதாக அரைத்து லேசாக தலை முழுவதும் தடவி உடனே அலசி விடுவது மிகவும் நல்லது. அதன் கசப்புத்தன்மை தலையில் இருக்கும் கிருமிகளை அழிக்கும். எனினும் வேப்பிலை உஷ்ணத் தன்மை கொண்டுள்ளதால் அடிக்கடி பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும். குளிக்கும் பொழுது அந்த நீரில் வேப்ப இலைகளைப் போட்டு குளித்தால் மிகவும் நல்லது.
  • இரவில் படுக்கும் முன் இஞ்சி சாறு மற்றும் பீட்ரூட் சாறு சிறிதளவு எடுத்து தலை முழுவதும் மசாஜ் செய்து மறுநாள் காலை தலையை அலசினால் ஒரு வாரத்தில் பொடுகு பிரச்னை வெகுவாக குறையும்.
  • ஆப்பிளை தோல் சீவி, நன்றாக மசித்து அதனுடன் எலுமிச்சைச் சாறு கலந்து தலைப்பகுதியில் தேய்த்து அரைமணி நேரம் கழித்து அலசினால் தலையில் இருக்கும் பூஞ்சைக் கிருமிகள் நீங்கி பொடுகு அழியும்.
  • கற்றாழை ஷாம்புகளை உபயோகிக்கலாம். கற்றாழை ஜெல்லை நன்கு தண்ணீரில் அலசிவிட்டு பேஸ்ட் போல் செய்து தலைப் பகுதி முழுவதும் பூசி அரைமணி நேரம் கழித்து அலசினால் பட்டுப்போல் கூந்தலும் பொடுகுப் பிரச்சினையும் தீரும்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 20 Feb 2024 4:54 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...