/* */

கருப்பட்டி குழல் புட்டு

கருப்பட்டி குழல் புட்டு
X

புட்டு என்பது கேரளாவில் மிக பிரபலமான காலை உணவு ஆகும். கேரளா மக்களின் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்த இந்த புட்டு தமிழகத்தின் தென் மாநிலங்களிலும் மிகவும் பிரசித்தம் ஆகும்.

கேரளாவில் புட்டுக்கு தொட்டுக்கொள்ள அப்பளம், நேந்திரம் பழம், பாசி பயறு மற்றும் கடலை கறி பயன்படுத்த படும் வேளையில் திருநெல்வேலி பகுதியில் கருப்பட்டி மற்றும் தேங்காய் பூ கலந்து புட்டு தயார் செய்யப்படும்.

இப்போது நாம் திருநெல்வேலி பகுதிகளில் பிரபலமான கருப்பட்டி குழல் புட்டு செய்யும் முறை பற்றி இங்கு காணலாம்.

தேவையான பொருட்கள்:

சம்பா பச்சரிசி (அல்லது) வெள்ளை பச்சரிசி – 1 கிலோ.

தேங்காய் – முழு காய் ஒன்று துருவியது.

கருப்பட்டி – சிரட்டை துருவியது.

உப்பு – சிறிதளவு.

செய்முறை:

சம்பா பச்சரிசி அல்லது வெள்ளை பச்சரிசி இரண்டில் ஒன்றை எடுத்து தண்ணீரில் அலசி, ஒரு மணி நேரம் வரை தண்ணீரில் ஊற வைக்கவும். பின்னர் அதனை ஒரு வெள்ளை துணியில் உலர்த்தி ஒரு மணி நேரம் காயவிட்டு, மிக்சியில் போட்டு சற்று கரகரப்பாக திரித்துக் கொள்ளவும்.

இப்போது திரித்த மாவில் சிறிதளவு உப்பு தூவி, தண்ணீர் சேர்த்து உதிரி உதிரியாக இருக்கும் படி கலந்து வைத்துக் கொள்ளவும். புட்டு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு, அதனை அடுப்பில் ஏற்றி கொதிக்க விடவும். இப்போது புட்டுக் குழலில் நாம் உதிரி உதிரியாக கலந்து வைத்துள்ள மாவை இரண்டு கைப்பிடி அளவு போட்டு, அதன் மேல் சிறிதளவு தேங்காய் துருவல் மற்றும் கருப்பட்டி துருவல் ஆகியவற்றை போடவும்.

இப்படியே மாற்றி மாற்றி போட்டு புட்டு குழலை நிரப்பி, புட்டு பாத்திரத்தில் வைத்து நீராவியில் சுமார் 8 நிமிடங்கள் வேக விடவும். பின்னர் புட்டு குழலில் இருந்து புட்டை வெளியே தள்ளி எடுத்து, சிறிதளவு நெய் ஊற்றி பரிமாறவும். இதோ சத்தான மற்றும் இனிப்பான கருப்பட்டி குழல் புட்டு தயார்.

குறிப்பு:

1. புட்டு செய்வதற்கு கடைகளில் சம்பா புட்டு மாவு மற்றும் வெள்ளை புட்டு மாவு பாக்கெட்டுகளாக விற்பனை செய்யப்படுகிறது. அதனை வாங்கியும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

2. புட்டிற்கு மாவு கிளறும் போது, தண்ணீருக்கு பதிலாக தேங்காய் தண்ணீர் சேர்த்துக் கொண்டால் கூடுதல் சுவை கிடைக்கும்.

Updated On: 7 July 2021 2:44 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  2. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  3. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  4. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  5. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  10. ஆரணி
    புகையிலை பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது