/* */

நிழல் 'ஹீரோ'க்களை பாராட்டும் இளைஞர்கள்; நிஜ 'ஹீரோ'க்கள் யார் தெரியுமா?

சினிமா ஹீரோவிற்காக தமிழக இளைஞர் ஒருவர் தனது உயிரை இழந்த அதே நேரத்தில், இந்திய ராணுவம் தனது உயிரை பணயம் வைத்து 172 உயிர்களை காப்பாற்றியது.

HIGHLIGHTS

நிழல் ஹீரோக்களை பாராட்டும் இளைஞர்கள்; நிஜ ஹீரோக்கள் யார் தெரியுமா?
X

இவர்கள் ‘நிழல்’ ஹீரோக்கள் ( கோப்பு படம்- தமிழ் சினிமா நடிகர்கள்)

2023 ஜனவரி 14 அன்று, சென்னையில் இரண்டு சினிமா கதாநாயகர் களின் திரைப்படம் வெளியானது.

எல்லா இடங்களிலும் போட்டி போட்டுக்கொண்டு யார் 'வாரிசு'? யாருக்கு 'துணிவு'? எனது ஹீரோவா? உனது ஹீரோவா? வசூலில் சாதனை படைப்பது யார்? எந்த ஹீரோவின் கட் அவுட்டிற்கு பாலபிஷேகம்? என கொண்டாடிய இளைஞர் சமூகம், உற்சாகம் நிலை தடுமாறி போய் தண்ணீர் டேங்கர் லாரி மேல் இருந்து கீழே விழுந்து தனது ஹீரோவிற்கு உயிரையே தியாகம் செய்தது. இதுவரை சொன்னது எல்லாம் தமிழகத்தில் நடந்த நிஜ காட்சிகள்.

ஆனால், அதே நாளில் அன்று மாலை 5.40 மணிக்கு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சோஷில்லா சுரங்கப்பாதையில் வேலை செய்து வந்த மெகா இன்ஜினியரிங் இண்டஸ்ட்ரீஸை சேர்ந்த 172 பேர், மிகப்பெரிய பனிச்சரிவில் மாட்டிக் கொண்டார்கள்.

அந்த கம்பெனி உடனே நமது இந்திய ராணுவத்தை தொடர்பு கொண்டு, உதவி கோரினர். ''சேவா பரமோ தர்ம" என்ற தனது குறிக்கோளுக்கு இணங்க, ராணுவம் உடனடியாக அஸ்ஸாம் ரைபிள் ரெஜிமெண்ட்டை சேர்ந்த தேர்ந்தெடுக்கப் பட்ட வீரர்களை களத்தில் இறக்கியது. அந்த காரிருள் சூழ்ந்த மைனஸ் 15 டிகிரி கடும் பனிக் குளிரில் மோப்ப நாய்களின் துணையுடன் தேவையான கருவிகளுடன் ராணுவம் மீட்பு பணியில் இறங்கியது. கூடவே மருத்துவ குழுவும், உயிர் காக்கும் சேவையில் இறங்கியது.

ஜனவரி 15 காலை பொழுது புலரும் வேளையில், 172 பேரும் உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டனர். அதுவும் சிறிதளவு காயம் கூட இல்லாமல்.

தமிழகத்தில் சாதாரண அரிதாரம் பூசும் நடிகனுக்காக தன் மதிப்பு மிக்க உயிரை பலி கொடுத்த பரிதாபம் நிகழ்ந்த நிலையில், இந்தியாவில் நமது ராணுவம் இத்தகைய சாதனையை படைத்துள்ளது. இதில் இருந்தாவது யார் உண்மையான ஹீரோக்கள் என்பதை நமது இளைஞர் சமூகம் உணர்ந்து கொள்ள வேண்டும். நிழல் ஹீரோக்களை பார்த்து, இனியும் ஏமாறக்கூடாது.

தங்கள் உயிரை பணயம் வைத்து 172 உயிர்களை மீட்ட பெயர், முகம் தெரியாத அந்த ராணுவ ஹீரோக்களுக்கு நமது வணக்கங்களை தெரிவிப்போம்.

ஜெய்ஹிந்த்!

Updated On: 28 Jan 2023 6:52 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    Bhagyaraj மருமகளுடன் குத்தாட்டம் போட்ட Gayathri Raghuram ! #dance...
  2. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துச் சொல்வோம் வாங்க..!
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    நண்பனின் பிறந்தநாளில் வேடிக்கையா கலாய்க்கலாம் வாங்க
  5. லைஃப்ஸ்டைல்
    வேடிக்கையான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  6. வீடியோ
    பெண் வேடத்தில் வந்த Cool Suresh ! அரண்டுபோன K Raja !#coolsuresh...
  7. இந்தியா
    ஒருபோதும் இந்து அல்லது முஸ்லீம் என்று சொல்லவில்லை: பிரதமர் மோடி
  8. லைஃப்ஸ்டைல்
    சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் டீ, காபியை தவிர்க்க வேண்டுமாம்....
  9. இந்தியா
    NewsClick நிறுவனரை கைது செய்தது செல்லாது, உடனடியாக விடுதலை செய்ய...
  10. பட்டுக்கோட்டை
    காலநிலை அறிந்த பயிர் பாதுகாப்பு : விவசாயிகள் பின்பற்ற அறிவுறுத்தல்..!