/* */

ஷிவின் வெற்றி பெற அதிக வாய்ப்பு - குயின்ஸி 'பளிச்'

Queency bigg boss-‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில், ஷிவின் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக, சமீபத்தில் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட குயின்ஸி தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

ஷிவின் வெற்றி பெற அதிக வாய்ப்பு - குயின்ஸி பளிச்
X

Queency bigg boss - சமீபத்தில், பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய குயின்ஸி.

bigg boss season tamil 6, Queency bigg boss- கடந்த அக்டோபர் மாதம் துவங்கிய 'பிக்பாஸ்' நிகழ்ச்சி, இப்போது 60 நாட்களை கடந்து போய் கொண்டிருக்கிறது. இப்போட்டியில் மொத்தம் 21 பேர் பங்கேற்ற நிலையில், தற்போது அசீம், கதிரவன், விக்கிரமன், அமுதவாணன், ராம், மணிகண்டன், ஏடிகே, ஷிவின், ரக்சிதா, தனலட்சுமி, ஆயிஷா, மைனா நந்தினி, ஜனனி ஆகிய 13 பேர் மட்டுமே வீட்டுக்குள் உள்ளனர். எட்டு பேர் வெளியேறி விட்டனர். ஜிபி முத்து, தனது சொந்த விருப்பத்தின் பேரில் அவராகவே வெளியேறி விட்டார். சாந்தி, அசல் கோளார், ஷெரினா, மகேஸ்வரி, ராபர்ட் மாஸ்டர், நிவாஷினி ஆகியோரை தொடர்ந்து, கடந்த வாரம் குயின்ஸி வெளியேறினார்.


தற்போது அவர் அளித்த 'லைவ்' பேட்டி ஒன்றில், 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் ஷிவன் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக, வெளிப்படையாக கூறியுள்ளார்.

அந்த பேட்டியில், கேள்விகளுக்கு பதில் அளித்து குயின்ஸி கூறியதாவது;

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றது நன்றாகவே இருந்தது. ஆனால், 'ரோலர் கோஸ்டர்' பயணித்தது போன்ற பயண அனுபவத்தை தந்தது. மிகவும் கவனமாக, மற்றவர்களுடன் பழக வேண்டி இருந்தது. யார் மனதையும், வார்த்தைகளால் புண்படுத்தி விடக்கூடாது என்பதில், மிகவும் கவனமாக இருந்தேன். ஆனால், மற்றவர்கள் சிலர் அதைப்பற்றி எல்லாம் சிறிதும் கவலைப்படாமல், தங்களது 'டாஸ்க்'களில் வெற்றி பெறுவதை மட்டுமே நோக்கமாக கொண்டு விளையாடினர்.

இனிமேல்தான், 'பிக்பாஸ்' நிகழ்ச்சியை நான் துவக்கத்தில் இருந்து பார்க்க போகிறேன். நான் என்னென்ன செய்திருக்கிறேன் என்பதை இனிமேல்தான் பார்க்க போகிறேன். கொக்கு பொம்மையை உடைத்ததற்காக, பிக்பாஸிடம் ஸாரி கேட்கும் 'புரோமோ'வை என் பிரண்ட் அனுப்பியிருந்தாள். அதை மட்டுமே பார்த்தேன்.

பிக்பாஸ் வீட்டில், 100 நாட்கள் வரை தாக்கு பிடித்து இருப்பதே பெரிய 'டாஸ்க்'தான். அப்படி பார்த்தால், 100 நாட்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்து விட்டாலே, அதுவே பெரிய வெற்றிதான். என்னை பொருத்த வரை, இந்த முறை பிக்பாஸ் டைட்டில் வின்னராக வெற்றி பெற ஷிவினுக்கு அதிக வாய்ப்புள்ளது. ஏனென்றால், அவரிடம் இயல்பாகவே பல நல்ல குணங்களும், நல்ல நடவடிக்கைகளும் உள்ளது.


அடுத்து அசீம், விக்ரமன், மணிகண்டன் போன்றவர்கள் சிறந்த போட்டியாளர்களாக உள்ளனர். அசீம், கோபத்தை குறைத்துக்கொண்டு விளையாடினால், அனைவருக்குமே அவரை பிடிக்கும். 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் பங்கேற்றதால், நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். வெளியுலகத்தில் நிறைய வாய்ப்புகள், வசதிகளை பெறுகிறோம். ஆனால், அதை மிக சாதாரணமாக நினைத்து விடுகிறோம். கட்டுப்பாடுகளுக்குள் வாழும்போதுதான், நிஜ உலகம் தரும் சுதந்திரமும், வசதிகளும் புரிகிறது.


உணவின் முக்கியத்துவம், குடும்பத்தாரின் அன்பு, வெளியுலகத்தின் தொடர்புகளை உணர முடிந்தது. குறிப்பிட்ட இடத்துக்குள் பார்த்தவர் முகங்களையே தினமும் பார்த்துக்கொண்டிருப்பது என்பதெல்லாம் மிகவும் சிரமம். அந்த சூழ்நிலையில் இருப்பதே கஷ்டம்தான். உணவு, துாக்கம், போட்டிகள், சக போட்டியாளர்களிடம் சண்டை, வாக்குவாதம் என அத்தனையும் கடந்து அங்கு தாக்கு பிடித்து இருப்பதே கஷ்டம்தான். அதை நிறைய முறை, பிக்பாஸ் வீட்டுக்குள் நான் உணர்ந்தேன், என கூறியிருக்கிறார் குயின்ஸி.

Updated On: 9 Dec 2022 4:24 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?
  2. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  7. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  8. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  9. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  10. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு