வாக்கு எண்ணும் பணிக்கான வழிமுறைகள்: கலெக்டர் தலைமையில் ஆலோசனை

வாக்கு எண்ணும் பணிக்கான வழிமுறைகள் குறித்து கலெக்டர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-05-25 02:37 GMT

மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்

நாடாளுமன்றத் தேர்தல் 2024 திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை மற்றும் ஆரணி ஆகிய இரண்டு நாடாளுமன்ற தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வருகிற ஜூன் மாதம் நான்காம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை மையங்களில் எண்ணப்பட உள்ளன.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வாக்கு எண்ணும் பணிக்கான வழிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் தேர்தல் அலுவலரும் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள், நுண் பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் இரண்டு பாராளுமன்ற தொகுதிகளின் பணி புரியும் அலுவலர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் பின்பற்றப்பட வேண்டிய இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படி வாக்கு எண்ணிக்கை மையங்களில் பணிபுரிய உள்ள அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள், நுண் பார்வையாளர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை குறித்து மாவட்ட கலெக்டர் கூறினார் அப்போது அவர் கூறுகையில்.

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையம் திருவண்ணாமலை நகரம் திண்டிவனம் சாலை ஒழுங்குமுறை விற்பனை கூட வளாக கட்டிடங்கள் ஆகும். ஆரணி நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையம் திருவண்ணாமலை நகரம் செங்கம் சாலை சண்முகா தொழிற்சாலை அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாக கட்டிடங்கள் ஆகும்.

சட்டமன்றத் தொகுதி வாரியாக மேற்குறிப்பிடப்பட்ட இடங்களில் ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை மையத்திலும் 14 மேசைகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். ஒவ்வொரு மேசைக்கும் ஒரு மேற்பார்வையாளர் ஒரு உதவியாளர் ஒரு நுண் பார்வையாளர் என மூன்று நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான நான்காம் தேதி அன்று காலை 5 மணிக்குள் வாக்கு எண்ணும் மையத்திற்குள் பணியாளர்கள் வந்துவிட வேண்டும்.

பிறகு ஒவ்வொரு பணியாளருக்கும் மேசை ஒதுக்கீடு செய்யப்படும். வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பாக வாக்கு எண்ணிக்கை ரகசியம் மீறமாட்டேன் என்பது குறித்து உறுதிமொழி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முன்பாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

காலை 8:30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் வாக்கு எண்ணிக்கை தொடங்கும் . மேலும் வாக்கு எண்ணும் மையத்தில் செல்போன், ஐ பேட் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டுவர தடை செய்யப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் நடைமுறைகள் குறித்து அனைத்து அலுவலர்களுக்கும் விரிவாக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் உரிய வழிமுறைகள் பின்பற்றி வாக்கு எண்ணிக்கை பணியினை சிறப்பான முறையில் நடத்திட வேண்டுமாய் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன் கேட்டுக்கொண்டார்.

இக்கூட்டத்தில் ஆரணி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் குமரன், திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி மற்றும் நியமிக்கப்பட்டுள்ள அனைத்து வாக்கு எண்ணிக்கை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News