அமைப்பு சாரா ஓட்டுநர் அணி சார்பில ஆட்டோ நிறுத்தம் திறப்பு

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி சார்பில் ஆட்டோ நிறுத்தம் திறக்கப்பட்டுள்ளது.

Update: 2024-06-14 03:03 GMT

ஆட்டோ நிறுத்தம் பெயர் பலகையை திறந்து வைத்த மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர்  எ.வ.வே. கம்பன்

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி சார்பில் 3 இடங்களில் ஆட்டோ நிறுத்தம் திறப்பு கொடியேற்று விழா திருவண்ணாமலையில் நடைபெற்றது. இவ்விழாவில் மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் .எ.வ.வே. கம்பன் திறந்து வைத்து, நல உதவிகள் வழங்கினார்.

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அமைப்பு சாரா ஒட்டுநர் அணி சார்பில் 3 இடங்களில் ஆட்டோ நிறுத்தம் மற்றும் கொடியேற்று விழா நடைபெற்றது. கழக மாநில மருத்துவர் அணித்துணை தலைவர் எ.வ.வே.கம்பன் கலந்து கொண்டு பெயர் பலகைகளை திறந்து வைத்து நல உதவிகள் வழங்கினார்.

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி சார்பில், கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு, திருவண்ணாமலையில் 3 இடங்களில் ஆட்டோ நிறுத்தம், கொடியேற்று விழா மற்றும் நல உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி

அமைப்பாளர் ஏ.ஏ.ஆறுமுகம் தலைமை வகித்தார். மாவட்ட துணை மெட்ராஸ் சுப்பிரமணி அமைப்பாளர்கள் ஷாஜகான், ஜெயபிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆட்டோ நிறுத்தம் தலைவர் சிகுமார் அனைவரையும் வரவேற்று பேசினார். திருவண்ணாமலை கற்பக விநாயகர் கோவில் தெருவில் பேரறிஞர் அண்ணா ஆட்டோ ஓட்டுநர் சங்கம், அசலியம்மன் கோயில் தெரு அருகில் உதயநிதி ஸ்டாலின் ஆட்டோ ஓட்டுநர் சங்கம், அருணை மருத்துவர் கல்லூரி அருகில் அமைச்சர் எ.வ.வேலு ஆட்டோ, ஆம்புலன்ஸ், டுரிஸ்ட்கார் ஓட்டுநர் சங்கம் ஆகிய நிறுத்தங்களில், கழக மருத்துவர் அணி துணைத் தலைவர் எ.வ.வே. கம்பன் பெயர் பலகைகளை திறந்து வைத்தும், கழக கொடியை ஏற்றி வைத்தும் சீருடை மற்றும் அறுசுவை உணவு உள்ளிட்ட நல உதவிகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

விழாவில் மாவட்ட பொருளாளர் பன்னீர் செல்வம், நகர செயலாளர் கார்த்தி வேல்மாறன், மாவட்ட துணைச் செயலாளர் ப்ரியா விஜயரங்கன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

விழாவில் மாவட்ட அமைப்பாளர்கள் காலேஜ் ரவி, பாபு, அருண், கற்பகம் சரவணன், நகர மன்ற உறுப்பினர் அருணா ரவி, மாவட்ட துணை அமைப்பாளர்கள் லக்கி அரவிந்து, ராயல் தியாகு, பிரகாஷ், நகர மன்ற உறுப்பினர்கள் ,அமைப்பு சாரா ஓட்டுனர் அணி உறுப்பினர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிறைவாக அருணை மருத்துவக்கல்லூரி ஆட்டோ ஓட்டுநர் சங்க தலைவர் அருள்குமரன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News