திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல் படுத்தப்படும் அரசு திட்ட பணிகள் கலெக்டர் ஆய்வு

அனைத்து வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஆய்வுக் கூட்டம் தலைமையில் நடைபெற்றது.

Update: 2024-06-14 02:29 GMT

மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டம்

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கரபாண்டியன், தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) ரிஷப் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கி ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் பேசியதாவது:

திருவண்ணாமலை மாவட்டத்தில் 18 ஊராட்சி ஒன்றியங்களில் 360 கிராம ஊராட்சிகள் உள்ளது. இந்த ஊராட்சிகளில் அரசு சார்பில் பல்வேறு முன்னேற்ற திட்டப் பணிகள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மத்திய அரசு, மாநில அரசின் நிதி ஒதுக்கிட்டின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம், ஜல் ஜீவன் மிஷன் திட்டம், தூய்மை பாரத இயக்கம் (கிராமியம்) பள்ளிகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம், முதல்வரின் கிராம சாலைகள் திட்டம் போன்ற திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும்.,

மேலும் இந்த திட்டங்களின் தற்போதைய நிலை குறித்தும், செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பொதுமக்களுக்குத் தேவையான குடிநீா் விநியோகம், சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருத்தல், கிராமப்புற சாலைகள் மேம்பாடு, மழைநீா் சேகரிப்புப் பணிகள், ஏரி மற்றும் குளங்கள், நீா்வழித் தடங்களை தூா்வாருதல் போன்ற பல்வேறு பணிகளை தரமாகவும், விரைவாகவும் செய்து முடிக்க வேண்டும் என கலெக்டர் கூறினார்.

கூட்டத்தில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 18 ஊராட்சி ஒன்றியங்களின் வட்டார வளா்ச்சி அலுவலா்கள், ஊரக வளா்ச்சித் துறை பொறியாளா்கள், துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அனைத்துப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News