திருவண்ணாமலை மாவட்டத்தில் மகளிர் ஆணையத் தலைவர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டத்தில் மகளிர் ஆணையத் தலைவர் சேவை மையங்களில் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-06-14 02:45 GMT

ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஆய்வு மேற்கொண்ட மகளிர் ஆணையத்தின் தலைவர்,மாவட்ட ஆட்சித்தலைவர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் குமரி ,மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன், முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார்.

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்தசேவை மையத்தில் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் குமரி ,மாவட்ட ஆட்சித்தலைவர் முன்னிலையில் ஆய்வு செய்து, மேலும் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை நிவர்த்தி காணும் விதத்தில் மருத்துவ உதவி, சட்ட உதவி உளவியல் ஆலோசனைகள், காவல்துறை உதவியுடன் மீட்பு மற்றும் தங்கு வசதியுடன் கூடிய ஒருங்கிணைந்த மையத்தை ஆய்வு மேற்கொண்டனர். முன்னதாக தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் செய்யாறில் இயங்கி வரும் மாவா தொண்டு நிறுவனத்தின் பெண்கள், முதியோர் பாதுகாப்பு இல்லம் மற்றும் சுவாதார் கிரே பெண்கள் பாதுகாப்பு இல்லத்தில் அடிப்படை வசதிகளை ஆய்வு மேற்கொண்டு அவர்களின் தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

இதனை தொடர்ந்து திருவண்ணாமலையில் நேசம் பெண்கள் பாதுகாப்பு இல்லம், கிரேஸ் முதியோர் இல்லம், ஒருங்கிணைந்த குழந்தைகள் மற்றும் முதியோர் இல்லத்தில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் தனியார் பெண்கள் தங்கும் விடுதிகள், அரசு பிற்படுத்தப்பட்டோர் விடுதிக ள் , அ ர சு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் முன்னிலையில் இன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறை அலுவலர்களுடனும் ஆய்வுக்கூட்டம் நடத்தி ஆ லோசனைகளை வழங்குகிறார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட சமூக நல அலுவலர் (பொறுப்பு) சரணியா, ஒருங்கிணைந்த சேவை மையம் நிர்வாகி எலிசபெத் ராணி மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News