திருவண்ணாமலையில் போதை பொருட்களுடன் ரஷ்ய பெண் கைது

திருவண்ணாமலையில் போதைப் பொருட்களுடன் ரஷ்ய பெண் உட்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-06-16 02:15 GMT

திருவண்ணாமலையில் போதைப் பொருட்களுடன் வெளிநாட்டு பெண் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவது போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதை தடுக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் இந்தியா வந்துள்ள ரஷ்ய நாட்டை சேர்ந்த குழுவினர் போதை பொருட்களை வைத்துள்ளதாக மத்திய போதை பொருட்கள் தடுப்பு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் என் சி பி சென்னை மண்டல இயக்குனர் அரவிந்தன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு ரகசிய விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

இந்த விசாரணையில் ரிஷிகேஷ், சென்னை மணலி மற்றும் திருவண்ணாமலையில் ரஷ்ய நாட்டை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் விருந்து மற்றும் விழா நிகழ்ச்சிகளை நடத்தியது தெரிய வந்தது.

இந்த நிகழ்ச்சிகளில் போதை பொருட்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் மத்திய போதைப் பொருட்கள் தடுப்பு பிரிவினருக்கு ஏற்பட்டது. இதனால் விசாரணை தீவிர படுத்தப்பட்டது.

இந்நிலையில் திருவண்ணாமலையில் மத்திய போதை பொருள் கடத்தல் பிரிவு அதிகாரிகள் திருவண்ணாமலையில் முகாமிட்டு கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது சந்தேகத்தின் அடிப்படையில் ரஷ்யாவை சேர்ந்த 42 வயது ஆண் 36 வயது உள்ள ஒரு பெண் இன இருவரிடம் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர்.

அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர். உடனடியாக அந்த இருவரையும் அதிகாரிகள் அழைத்து சென்று தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

அவர்கள் இருவரும் அத்தியந்தல் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருப்பதாக தெரிவித்தனர்.

உடனடியாக அதிகாரிகள் அவர்கள் தங்கி இருந்த விடுதியில் சோதனை நடத்தினர். அப்போது அவர்களிடம் இருந்து 239 கிராம் போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

மேலும் அவர்களிடத்தில் அதிகாரிகள் விசாரித்ததில் திருவண்ணாமலையில் வரும் 17ஆம் தேதி நடக்கும் கூட்டம் ஒன்றில் பயன்படுத்த திட்டமிட்டது தெரிய வந்துள்ளது.

அமனிடா மஸ்காரியா, மேஜிக் மஸ்ரூம் என்ற போதை காளான், பதப்படுத்தப்பட்ட அயாஹுஸ்கா தாவரப்பொடி, 'கம்போ' என்ற பச்சை மரத்தவளையில் இருந்து எடுக்கப்படும் விஷத்தை மருத்துவ குணம் உடையது, ஆண்மைக் குறைவை போக்கும் என, வினியோகம் செய்ய இருந்தது தெரியவந்தது.

இதற்கு முன், உத்தரகண்ட் மாநிலம், ரிஷிகேஷ் உள்ளிட்ட இடங்களில் நடந்த நிகழ்ச்சியில், இவர்கள் போதைப்பொருள் வினியோகம் செய்ததும் தெரியவந்தது. இருவரையும் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 239 கிராம் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ரஷ்ய நாட்டை சேர்ந்த இருவரையும் போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள் சென்னைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்நிகழ்வின் தொடர்ச்சியாக திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சோதனையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் எட்டு பேரை மடக்கி பிடித்து கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து அவர்களிடம் இருந்து 11 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News