திருவண்ணாமலை; வருவாய் கிராமங்கள் சந்தை மதிப்பு திருத்தியமைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் வருவாய் கிராமங்கள் சந்தை மதிப்பு திருத்தியமைப்பு செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-06-15 01:10 GMT

திருவண்ணாமலை மாவட்டத்தில் வருவாய் கிராமங்கள் சந்தை மதிப்பு திருத்தியமைப்பு ( கோப்பு படம்) 

திருவண்ணாமலை மாவட்டத்தில் வருவாய் கிராமங்கள் சந்தை மதிப்பு திருத்தி அமைப்பு

இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு

சந்தை மதிப்பு வழிகாட்டி மதிப்பினை சீரமைத்தல் தொடர்பாக இந்திய முத்திரைச் சட்டம் பிரிவு 47A ன் கீழான தமிழ்நாடு முத்திரை (சொத்துகளுக்கான சந்தை மதிப்பு வழிகாட்டி தயாரிக்க மதிப்பீடு செய்தல், வெளியிடுதல், திருத்தியமைத்தலுக்காக மதிப்பீட்டு குழு ஏற்படுத்துதல்) விதிகள் 2010 விதிகளில் விதி 4-ன்படி மைய மதிப்பீட்டு குழு 26.04.2024 ல் நிர்ணயம் செய்த நெறிமுறை கோட்பாட்டிற்கு இனங்க திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்கள் வாரியாக வரைவு வழிகாட்டி பதிவேடுகள் தயாரிக்கப்பட்டு பொதுமக்கள் பார்வையிடும் வகையில் வட்டாட்சியர், சார்பதிவாளர் அலுவலகங்கள் உட்பட முக்கிய அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இதன் விவரங்கள் https://tnreginet.gov.in/portal தெரிந்துக்கொள்ளும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. இதன்மீது ஆட்சேபணைகள் மற்றும் கருத்துரைகள் இருப்பின் 15 நாட்களுக்குள் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான மதிப்பீட்டு துணை குழுவிடம் கீழ்கண்ட முகவரியில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ பொதுமக்கள் அளிக்கலாம் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

இந்திய விமானப்படை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

அக்னிவீர் வாயு (இந்திய விமானப்படை) தேர்வுக்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இத்தேர்வானது 18.10.2024 முதல் இணையதளம் வாயிலாக நடத்தப்படவுள்ளது. இத்தேர்வில் கலந்துகொள்வதற்கு 08.07.2024 முதல் 28.07.2024 வரை https://agnipathavayu.cdac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் . இணையவழி தேர்வில் க ல ந்து கொ ள்ளு ம் வகையில் இத்தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் மாதிரிதாள்கள் அவ்விணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இத்தேர்வுக்கு கல்வித் தகுதியாக 12-ஆம் வகுப்பு அல்லது மூன்று வருட பட்டயப் படிப்பு அல்லது தொழில் படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். திருமணமாகாத ஆண் மற்றும் பெண்கள் 03-07-2004 முதல் 03.01.2008 வரையான காலத்தில் பிறந்தவராகவும் இருக்க வேண்டும். எனவே திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இத்தேர்வில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன், தெரிவித்துள்ளார்.

Similar News