மருத்துவர் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: அமைச்சர் தகவல்

தமிழகத்தில் காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

Update: 2024-06-14 01:42 GMT

எம்.பி.பி.எஸ்., படித்து முடித்த  மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிய சுகாதாரத் துறை அமைச்சர் 

தமிழ்நாட்டில் இன்னும் இரண்டு மாதங்களில் 2553 மருத்துவர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியில் 6வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக் கழக துணை வேந்தர் நாராயணசாமி தலைமை தாங்கினார். துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலெக்டர் பாஸ்கர பாண்டியன், மருத்துவக் கல்வி இயக்குநர் சங்குமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் அரிகரன் வரவேற்றார்.

தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சுப்பிரமணியன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு எம்.பி.பி.எஸ்., படித்து முடித்த 98 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிப் நிகழ்ச்சியில் பேசியதாவது:

தமிழ்நாட்டில் உள்ளபல்வேறு மாவட்டங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் நடைபெற்ற மருத்துவ மாணவர்களின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டம் அளித்திருந்தாலும் கூட திருவண்ணாமலையில் நடைபெற்றுவரும் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு மருத்துவப் பட்டம் அளிப்பது தனக்கு மிகுந்த பெருமையை ஏற்படுத்தி உள்ளது.

ஆன்மீக ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரியில் இளங்கலை பயின்று பட்டம் பெற்றது மாணவர்கள் ஆகிய உங்களுக்கும் மிகுந்தபெருமை ஆகும்.

திருவண்ணாமலை சுற்றியுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள பொதுமக்கள் இருதய நோயால்  பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெறுவதற்கு வேலூர் போன்ற மாநகரங்களுக்கு சென்று சிகிச்சை பெற்று வரும் நிலையில், வருகின்ற நிதியாண்டில் தமிழ்நாடு முதல்வரை ஆணையைப் பெற்று திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கேத்லேப் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அதேபோன்று  திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள வகுப்பறைகள், நூலகங்கள் அனைத்தும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய வசதிகள் மேம்படுத்தப்படும். அதேபோன்று மருத்துவமனை ஆடிட்டோரியம் குளிர்சாதன வசதி விரைவில் அமைக்கப்படும்.

கடந்த மூ ன் று மாதங்களுக்கு முன்பு 1021 காலிப் பணியிடங்கள் வெளிப்படைதன்மையுடன் நிரப்பப்பட்டுள்ளது. 977 செவிலியர் பணியிடங்கள், 400- க்கும் மேற்பட்ட மருந்தாளுநர் பணியிடங்கள் வெளிப்படைதன்மையோடு நிரப்பப்பட்டுள்ளது . இரண்டு மாத காலத்திற்குள் 2553 மருத்துவர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.

தற்பொழுது மருத்துவ பட்டம் பெற்று இருப்பவர்கள் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களாக சேர விண்ணப்பிக்க ஜூன் 15ஆம் தேதி வரை கடைசி தினம் என்பதால் அதனைதற்போது பட்டம் பெற்றுள்ளவர்கள் பயன்ப டு த் தி க் கொண்டு அனைத்து விண்ணப்பங்களையும் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும் என்றும் மாணவர்களுக்கு தேவையான பணிகள் அனைத்தையும் துறை அலுவலர்கள் உடனடியாக விரைந்து முடித்து தருவார்கள் என்றும் உறுதியளித்தார்.

விழாவில், ஆரணி தொகுதி மக்களவை உறுப்பினா் தரணிவேந்தன், எம்எல்ஏக்கள் கிரி (செங்கம்),.சரவணன் (கலசப்பாக்கம்), ஜோதி (செய்யாறு), மாநில தடகள சங்கத்தின் துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், மாவட்ட ஊராட்சித் தலைவா் பாா்வதி சீனிவாசன், மருத்துவா்கள், உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News