அரசு மாணவர் விடுதி வார்டன் பணியிடை நீக்கம்: ஆட்சியர் உத்தரவு

கலசப்பாக்கம் மாணவர் விடுதியில் ஆட்சியர் முருகேஷ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2022-07-15 01:04 GMT

ஆதி திராவிடர் நல மாணவியர் விடுதியில் மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ், அங்கு இருந்த மாணவிகளிடம் உரையாடினார்.

கலசப்பாக்கத்தில் உள்ள  பிற்படுத்தப்பட்ட மாணவர் விடுதி, ஆதிதிராவிடர் மாணவிகள் விடுதி ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் ஆய்வு செய்து அங்கு உள்ள அடிப்படை வசதிகளை ஆய்வு செய்து சமையல் உணவுப் பொருட்கள் குறித்து மாணவ மாணவிகளிடம் கேட்டறிந்து உணவு பொருட்கள் இருப்பினை ஆய்வு செய்தார். மாணவர்களின் அறைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மாணவர்களின் வருகை பதிவேடு,  புத்தகத்தை சரிபார்த்து மாணவர்கள் பதிவேட்டில் உள்ளவாறு தங்கியுள்ளார்களா என்று நேரடியாக ஆய்வு செய்தார்.   அப்போது விடுதியில் சேர்க்கப்பட்டுள்ள 23 மாணவர்களில் 13 மாணவர்கள் மட்டுமே விடுதியில் தங்கி இருந்தது தெரிய வந்தது.

மேலும் முறையான ஆவணங்கள் விடுதியில் பராமரிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் விடுதியின் வார்டன் ரவியை பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் உத்தரவிட்டார். ஆதி திராவிடர் நல மாணவியர் விடுதியில் மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ் அவர்கள் அங்கு இருந்த மாணவிகளிடம் உரையாடினார். இந்நிகழ்ச்சியில் வட்டாட்சிய தட்சிணாமூர்த்தி, தனி வட்டாட்சியர் மலர்கொடி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ,ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அலுவலர்கள் ஊழியர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News