மிருகண்டா அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

மிருகண்டா அணையில் இருந்து தண்ணீரை பாசனத்திற்காக கலெக்டர் திறந்து வைத்தார்.

Update: 2024-04-30 02:44 GMT

பாசனத்திற்காக தண்ணீரினை மலர் தூவி திறந்து வைத்த மாவட்ட கலெக்டர்

கலசபாக்கம் அருகே மிருகண்டா அணையில் இருந்து விவசாய பாசனத்திற்காக வினாடிக்கு 95 கன அடி தண்ணீரை 3 நாட்களுக்கு பாசனத்திற்காக கலெக்டர் பாஸ்கர பாண்டியன் திறந்து வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் பகுதி மக்களின் பிரதான தொழில் விவசாயம். இப்பகுதி மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் மேல் சோழங்குப்பம் கிராமத்தில் உள்ள மிருகண்டா அணையில் மொத்த கொள்ளளவு 22.97.

இதில் தற்போது 11.97 அடி நீர்மட்டம் உள்ளது. இந்நிலையில் விவசாய பாசனத்திற்காக 3190.96 ஏக்கர் விவசாயிகள் பயனடையும் விதத்தில் வினாடிக்கு 94 கன அடி அளவு தண்ணீரை பாஸ்கர பாண்டியன் திறந்து வைத்தார்.

அப்போது மாவட்ட ஆட்சியர் கூறுகையில்,

நேற்று முதல் 11 ஆம் தேதி வரை 12 நாட்களுக்கு தொடர்ச்சியாக விவசாயம் செய்வதற்கு நீர் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

நேற்று முதல் வரும் 2ம் தேதி வரை பாசனத்திற்காக மூன்று நாட்கள் திறந்து விடப்பட்டுள்ளது.

தினமும் 94 கன அடி நீர் திறந்து வைக்கப்படுகிறது. இதன் மூலம் அணையின் நீர்ப்பாசனத்தின் மூலம் பயன்பெறும் விவசாயிகள் அனைவரும் தேவையான நீர்களை பயன்படுத்தி விவசாயத்தை பெருக்கிக் கொள்ளலாம். விவசாயத்தின் மகசூலை உயர்த்திக் கொள்ளலாம். மேலும் விவசாயத்திற்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தரப்படும் என ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் கூறினார்

கலசபாக்கம் வட்டத்தில் சுமார் 6500 எக்டேர் பரப்பளவில் தற்போது விவசாயிகள் நடவு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் அறிவழகன், உதவி செயற்பொறியாளர்கள் கோவிந்தராசு, ராஜகணபதி, பிடிஓக்கள் வேலு, அண்ணாமலை, தாசில்தார் ராஜராஜேஸ்வரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து நல்லான் பிள்ளை பெற்றான் பகுதியில் ₹2.42 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் கட்டும் பணிகளை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

Similar News