கோடுவெளி ஊராட்சியில் ஏரி சீரமைப்பு பணிகள்: பூந்தமல்லி எம்.எல்.ஏ கிருஷ்ணசாமி துவக்கம்..!

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அருகே கோடுவெளி ஊராட்சியில் ஏரி சீரமைப்பு பணியை பூந்தமல்லி தொகுதி எம்.எல்.ஏ கிருஷ்ணசாமி துவக்கி வைத்தார்.

Update: 2022-07-04 07:45 GMT

பூந்தமல்லி அருகே கோடுவெளி ஊராட்சியில், ரூ.68 லட்சம் மதிப்பில் ஏரி சீரமைப்பு பணிகளை துவக்கி வைத்து, பார்வையிட்ட எம்.எல்.ஏ கிருஷ்ணசாமி.

திருவள்ளூர் மாவட்டம்,  பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எல்லாபுரம் ஒன்றியம் கோடுவெளி ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் சுமார் 240 ஏக்கர் பரப்பளவில் கொண்ட ஏரி, சுற்றுவட்டார விவசாய பணிகளுக்கு பெரிதும் உதவி வருகிறது. இதையடுத்து, நீர்வளத்துறை சார்பில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரியை தூர்வாரி, கரைகளை பலப்படுத்தும் வகையில் பூமிபூஜை நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சி கோடுவெளி ஊராட்சி மன்றத்தலைவர் சித்ரா குமார் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி கலந்துகொண்டு, 68 லட்சம் ரூபாய் மதிப்பில் பணிகளை துவக்கி வைத்தார். இதைத்தொடர்ந்து, ஹிட்டாச்சி இயந்திரம் மூலம் தூர் வாரம் பணிகளை எம்.எல்.ஏ பார்வையிட்டு பணிகளை முடுக்கி விட்டார்.

முன்னதாக நடைபெற்ற பூமிபூஜை நிகழ்ச்சியில், எல்லாபுரம் மத்திய ஒன்றிய தி.மு.க செயலாளர் கோடுவெளி தங்கம் முரளி, மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் வெங்கல் பாஸ்கர், குமார், கே.ஜி அன்பு, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சத்தியநாராயணன், உதவி பொறியாளர் செல்வகுமாரி, ஊராட்சிமன்ற துணைத்தலைவர் சரத்குமார், ஊராட்சி செயலர் தாட்சாயணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.




Tags:    

Similar News