திமுக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்

திருவள்ளூர் அருகே திமுக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளிக்கப்பட்டது.

Update: 2024-04-26 09:15 GMT

செய்தியாளர்கள் சந்திப்பல் மகாலிங்கம் மற்றும் அவரது குடும்பத்தினர்.

திருவள்ளூர் அருகே ஆட்டோ ஓட்டுநரின் வீட்டை அடித்து உடைத்து அவரின் காதை துண்டாக அறுத்து பழிக்கு பழியை தீர்த்துக்கொண்ட ஊராட்சி மன்ற தலைவரின் கணவரும் திமுக பிரமுகரின் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக கிளை செயலாளர் என்பதால் காவல் துறை அலட்சியம் காட்டுவதாகவும். சம்பவத்தில் 2 பேரை மட்டும் சரண்டர் ஆன நிலையில் தாக்குதலில் ஈடுபட்ட மற்றவர்களையும் கைது செய்ய பாதிக்கப்பட்டவர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர் ஒன்றியம் தண்ணீர்குளம் பகுதியைச் சேர்ந்த மாரி என்பவரது மகன் மகாலிங்கம். ஆட்டோ ஓட்டுனரான இவரது மனைவி கலையரசி. இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இதில் மகாலிங்கத்தின் மூத்த மகனுக்கு இருதய பிரச்சனை மற்றும் சுவாச கோளாறு பிரச்சனை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இந்நிலையில் வீட்டுக் குழாய் நீரில் கழிவு நீர் கலந்து வருவதாக ஊராட்சி மன்ற தலைவர் தேவிகா என்பவரிடம் கொடுத்த புகாரில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் திருவள்ளூர் பிடிஓ அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.

நடவடிக்கை எடுப்பதாக பிடிஓ  உறுதி அளித்த நிலையில் இது குறித்த தகவல் அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் தேவிகாவின் கணவரும் திமுக கிளைச் செயலாளருமான தயாளனுக்கு கிடைத்து உள்ளது. இதனை தொடர்ந்து தயாளன்  மற்றும் அவரது உறவினர்கள் வீட்டிற்கு வந்து தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் மகாலிங்கம் வசிக்கும் தெருவில் 12 அடி சாலை அமைக்கும் பணி நடைபெற்ற போது சாலையை உயர்த்தி போட சொல்லி ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் தயாளன் தெரிவித்ததையடுத்து மகாலிங்கத்தின் ஆட்டோ சாலையிலிருந்து வீட்டுக்கு இறங்காதபடி உயரமாக அமைத்துள்ளனர்.

இது குறித்து மகாலிங்கம் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் தயாளனிடம் சென்று கேட்டபோது தகாத வார்த்தைகளால் பேசியதோடு மகாலிங்கத்தின் கை தோள்பட்டையை பிடித்து கடித்துள்ளார். மேலும் உயிர் நாடியையும் பிடித்து கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளார்.‌இதனால் செய்வதறியாது தவித்த மகாலிங்கம் தயாளனின் காதை கடித்துள்ளார். இதனால் அவரது காது துண்டானது. இது குறித்து நூறு என்ற அவசர போலீஸ் எண்ணிற்கு தகவல் கொடுத்தார் மகாலிங்கம்.

ஆனால் காவல்துறை வருவதற்குள் தயாளனின் உறவினர்கள் 16 பேரும் சரமாரியாக தாக்கி உள்ளனர். இது குறித்து ஊராட்சி மன்ற தலைவரின் கணவரும் திமுக கிளை செயலாளருமான தயாளன் மீது செவ்வாப்பேட்டை போலீசில் மகாலிங்கம் கொடுத்த புகாரை எடுக்காமல் அலைக்கழித்துள்ளனர்.

இதனையடுத்து மகாலிங்கத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி 21 நாள் கிளை சிறையில் அடைத்தனர். சிறையில் இருந்து வெளிவந்த மகாலிங்கம் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்துள்ளார். அப்போது மீண்டும் கடந்த 3-ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி என் மீது மீண்டும் புகார் கொடுக்கிறாயா? என கேட்டு தயாளனின் உறவினர்கள் 16 பேரும் அடையாளம் தெரியாத அடியாட்கள் மூன்று பேரும் என  19 பேர் மகாலிங்கத்தின் வீட்டிற்குள் அத்துமீறி புகுந்து மகாலிங்கத்தின் மூத்த மகனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி மகாலிங்கத்தின் காதை அறுத்துள்ளனர். தடுக்க வந்த அவரது மனைவி கலையரசி மற்றும் தந்தை மாரி ஆகியோரையும் சரமாரியாக அந்த கும்பல் தாக்கியுள்ளது.

சினிமா பாணியில் நடைபெற்ற இந்த சம்பவத்தால் அதிர்ந்து போன மகாலிங்கம் குடும்பத்தார் செய்வது அறியாது தவித்தனர். இதனையடுத்து மகாலிங்கத்தை பலத்த காயங்களுடன் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். அங்கு முதல் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மீண்டும் வீடு திரும்பியுள்ளனர்.

வாய்த் தகராறில் மகாலிங்கத்தின் தோள்பட்டையை கடிதத்தோடு உயிர் நாடியையும் பிடித்து கொலைவெறி தாக்குதல் நடத்தியதாலேயே தயாளனின் காதை கடித்த நிலையில் மகாலிங்கத்தின் மீது வழக்கு தொடர்ந்த போலீசார் தயாளன் குடும்பத்தார் வீடு புகுந்து தாக்கிய வழக்கில் திமுக கிளை செயலாளர் என்ற ஒரே காரணத்திற்காக வழக்கு பதிவு செய்யாமல் கைது செய்யாமல் செவ்வாப்பேட்டை போலீசார் அலட்சியம் காட்டியுள்ளனர். இந்நிலையில் மகாலிங்கத்தின் குடும்பத்தார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் தண்ணீர்குளம் கிராமத்திற்கு வராமல் மனைவி கலையரசியின் தாய் வீட்டிற்கு சென்று அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த வழக்கில் ரவிசங்கர் (27) விஜயராஜ் ( 26) ஆகிய இரண்டு பேர் மட்டும் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். தண்ணீர் குளம் கிராமத்திற்கு மீண்டும் வந்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை இருக்கும் நிலையில் வீடு புகுந்து தாக்கிய கிட்டத்தட்ட 19 பேரில் இரண்டு பேர் மட்டும் சரண் அடைந்து இருப்பதால் மேலும் தங்களுக்கு மீண்டும் உயிர் ஆபத்து இருப்பதால் வீடு புகுந்து தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மகாலிங்கம் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திமுக கிளைச் செயலாளர் குடும்பத்தோடு வந்து தாக்கிய நிலையில் போலீசில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காதது வருத்தம் அளிப்பதாகவும் இந்த நிலை மேலும் தொடராமல் இருக்க உடனடியாக அனைவரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News