பெரியபாளையம் அருகே செல்வ விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக விழா
பெரியபாளையம் அருகே ஆரணியில் பழமை வாய்ந்த செல்வ விநாயகர் திருக்கோவிலின் மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.
பெரியபாளையம் அருகே ஆரணியில் 70 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு செல்வ விநாயகர் திருக்கோவிலின் மகா கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம்,ஆரணி பஸ் நிறுத்தம் அருகே அருள்மிகு செல்வ விநாயகர் திருக்கோவில் உள்ளது. இந்த கோவில் 70 ஆண்டுகள் பழமை வாய்ந்தது ஆகும்.இக்கோவிலில் விமான கோபுரம் அமைத்து இக்கோவிலை விழா குழுவினர்களும், பொதுமக்களும் புனரமைத்தனர். இந்நிலையில்,இன்று காலை 10 மணிக்கு இக்கோவிலின் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதை முன்னிட்டு நேற்று மாலை கணபதி பூஜை,லட்சுமி பூஜை, புண்ணியாவசனம்,கணபதி அனுக்யாஹோமம்,வாஸ்து பூஜை உள்ளிட்டவை நடைபெற்றது. இன்று காலை கோ பூஜை,சூரிய பூஜை,ஏககால யாகசாலை பூஜைகள்,மகாபூர்ணகுதி உள்ளிட்டவை நடைபெற்றது.
இதன் பின்னர்,மதன் சிவா தலைமையில் வந்திருந்த வேத விற்பனர்கள் புனித நீர் அடங்கிய கலசங்களை மங்கள வாத்தியம் முழங்க பிரகாரப் புறப்பாடு கொண்டு வந்தனர்.காலை 10 மணிக்கு விமான கோபுரம்,மூலவர் உள்ளிட்டவைகளுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்தனர். இதன் பின்னர்,மூலவருக்கு அலங்காரம்,மகாதிபராதனை உள்ளிட்டவை நடைபெற்றது. பின்னர்,பக்தர்களுக்கு தீர்த்தம்,பிரசாதம் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில்,ஆரணி சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.மதியம் கோவில் வளாகத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.இரவு பூக்களாலும், மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் வானவேடிக்கையுடன் திருவீதி உலாவரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர்களும், பொதுமக்களும் சிறப்பாக செய்திருந்தனர்.நாளை முதல் 48 நாட்கள் மண்டலாபிஷேக விழா நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.