தீயில் எரிந்து வலைகளை இழந்த மீனவர்களுக்கு துரை சந்திரசேகர் எம்எல்ஏ ஆறுதல்

தீயில் எரிந்ததால் வலைகள் சேதம் அடைந்த இடத்தை சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் பார்வையிட்டு மீனவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

Update: 2024-04-23 01:16 GMT

மீனவர்களுக்கு ஆறுதல் கூறிய துரை சந்திரசேகர் எம்எல்ஏ.

பழவேற்காட்டில் நள்ளிரவில் தீக்கிரையான 30 லட்சம் மதிப்பிலான மீன்பிடி வலைகள் எரிந்து சேதம் அடைந்தன. காங்கிரஸ் எம்எல்ஏ நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறி இழப்பீடு பெற்று தர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி பழவேற்காடு கோட்டைக்குப்பம் மீனவ கிராமத்தில் நேற்று அதிகாலை மீனவர்களின் வலைகள் பாதுகாக்கப்படும் இடத்தில் திடீரென தீ கொழுந்து விட்டு எரிந்தது.மீன்வலைகள் முற்றிலுமாக எரிந்து நாசமானது. 40.மீனவர்கள் ஒன்றாக குழுவாக இணைந்து ஏரியில் சென்று மீன்பிடி தொழில் செய்யக்கூடிய பாடிவலைகள் எனப்படும் இரு பிரிவினரின் சுமார் 30லட்ச ரூபாய் மதிப்பிலான வலைகள் முற்றிலும் எரிந்து நாசமானது.

தீ விபத்துக்கான காரணம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பாலைவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பொன்னேரி காங்கிரஸ் எம்எல்ஏ துரை.சந்திரசேகர் சேதமடைந்த மீன்பிடி வலையை நேரில் பார்வையிட்டு தீ விபத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மீனவர்களிடம் கேட்டறிந்தார். வலைகளை நெருப்புக்கு பறிகொடுத்த மீனவர்களுக்கு ஆறுதல் கூறிய எம்எல்ஏ துரை.சந்திரசேகர் சேதமடைந்த மீன்பிடி வலைகளுக்கு மீன்வளத்துறை அதிகாரிகள் மூலம் இழப்பீடு பெற்று தர நடவடிக்கை எடுப்பதாக அப்போது உறுதியளித்தார்.

Tags:    

Similar News