ragavendra swamigal aradhana mahotsavam சேலம் ஸ்ரீராகவேந்த்ரா ஸ்வாமிகளின் 352 வது ஆண்டு ஆராதனை மஹோத்ஸவம்

ragavendra swamigal aradhana mahotsavam சேலம் ஸ்ரீஸ்ரீ வியாஸராஜ மட வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீஸ்ரீராகவேந்த்ர ஸ்வாமிகளின் 352 வது ஆண்டு ஆராதனை மஹோத்ஸவம் ஆகஸ்ட் 31 ந்தேதி முதல் செப்டம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் நடக்கிறது.;

Update: 2023-08-18 15:19 GMT

ragavendra swamigal aradhana mahotsavam

சேலம் ஸ்ரீஸ்ரீ வியாஸராஜ மட வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீஸ்ரீராகவேந்த்ர ஸ்வாமிகளின் 352 வது ஆண்டு ஆராதனை மஹோத்ஸவம் ஆகஸ்ட் 31 ந்தேதி முதல் செப்டம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் நடக்கிறது.

இம்மாதம் 29 ந்தேதி செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு ரிக்வேத உபா கர்மா (ஆவணி அவிட்டம்),30 ந்தேதி புதன்கிழமை காலை 6.30 மணிக்கு யஜூர் வேத உபாகர்மா ,அன்று மாலை 6.30 மணிக்கு தான்ய பூஜை,31 ந்தேதியன்று வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு தன்வந்திரி ஹோமம், பவமான ஹோமம், புருஸீக்த ஹோமம், மற்றும் ஸ்ரீராகவேந்த்ர அஷ்டாக்ஷர ஹோமம், காலை 9மணிக்கு பால் அபிஷேகம், பாதுகா பூஜை, கனகாபிஷேகம், சிறப்பு அலங்காரம், காலை 10 மணிக்கு ஸ்ரீராகவேந்த்ர ஸ்வாமிக்கு சந்தனக்காப்பு அலங்காரம் நடைபெறும். பின்னர் காலை 12 மணிக்கு தீபாராதனையும் இரவு 8 மணிக்கு ஸ்வஸ்தியும் நடைபெறும்.

செப்டம்பர் மாதம் 1 ந்தேதியன்று வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு 108 லிட்டர் பால் அபிஷேகமும், கனகாபிஷேகமும் நடக்கிறது. காலை 9.30 மணிக்கு ஸ்ரீராகவேந்த்ர ஸ்வாமிக்கு தங்க கவசம் சாத்துபடி நடக்கிறது. பின்னர் காலை 10.00 மணிக்கு சேலம் இசைப்பள்ளி தலைமையாசிரியர் கும்பகோணம் ஸ்ரீ சங்கரராமன் மற்றும் குழுவினரின் இன்னிசைக் கச்சேரியானது நடக்கிறது. மதியம் 12 மணிக்கு தீபாராதனையும், இரவு 8 மணிக்கு ஸ்வஸ்தியும்அன்றைய தினம் நடக்கிறது.

2ந்தேதி சனிக்கிழமையன்று காலை 9மணிக்கு பால் அபிஷேகம், பாதுகாபூஜை, கனகாபிஷேகம், சிறப்பு அலங்காரமும், காலை 10.30 மணிக்கு சேலம் பூர்ண பிரக்ஞா பஜனா மண்லியினரின் பக்தி இன்னிசையும்ந டக்கிறது.மேற்படி ஆராதனைக்கு பக்தர்கள் தங்களால் இயன்றளவு அரிசி,(பியூர் பச்சரிசி), வெல்லம், பருப்பு வகைகள், மளிகைப் பொருட்கள், தேன் ,பால் , தயிர், புளி,மற்றும் பழ வகைகளைத் தாராளமாக வழங்கலாம்,என தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் குழு மற்றும் ஸ்ரீஸ்ரீ வியாஸராஜ மடம் மேலாளர் ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ragavendra swamigal aradhana mahotsavam


ragavendra swamigal aradhana mahotsavam

ஸ்ரீராகவேந்த்ர சரிதம்

விஜயநகர சாம்ராஜ்யத்தில் இருந்து தமிழ்நாட்டிலுள்ள புவனகிரியில் வந்து வாழ்ந்துகொண்டிருந்த, பண்டிதர் திம்மண்ண பட்டர், கோபிகாம்பாள் தம்பதியினருக்கு, திருப்பதி வேங்கடவன் அருளால் கி.பி. 1595 ல் பால்குண ஸீக்ல சப்தமி, குருவாரம், மிருகஸீரா நக்ஷத்திரத்தில் தேஜோ மயமான ஆண்குழந்தை பிறந்தது. குலதெய்வ அருளால் பிறந்த அக்குழந்தைக்கு வேங்கடநாதன் எனப் பெயரிட்டனர். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்த வேங்கடநாதன், கல்வி கேள்விகளில் சிறந்த விளங்கி, பால்ய பருவத்திலேயே பல கலைகள் கற்றுத் தேர்ந்தார். தகுந்த வயதில் உபநயனம்செய்யப் பெற்று , மதுரைக்குச் சென்று தனது தமக்கையின் கணவரிடம் அனைத்து சாஸ்திரங்களையும் ஐயமுற கற்றார். பின் தன் தமையனாரின் விருப்பப்படி , சரஸ்வதி பாய் எனும் மங்கையை வாழ்க்கைத்துணையாக ஏற்றார்.

இல்லறத்தின் பயனாக வேங்கடநாதன்-சரஸ்வதி பாய் தம்பதியர்க்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு லக்ஷ்மி நாராயணன் எனப் பெயரிட்டு வளர்த்து வந்தனர். இல்லறத்தில் இருந்தாலும் வேங்கடநாதனின் மனம், இறை நாட்டத்தில் இருந்தது. குடும்பம் சூழ்நிலை கருதி தன் மனைவியின் ஆலோசனைப்படி கும்பகோணம் சென்று ஸ்ரீ மடத்தில்ஸ்ரீ சுசீந்த்ர தீர்த்தர் ஆதரவில் இறைபணி செய்து வந்தார். வேங்கடநாதரின் திறமையை நன்கு உணர்ந்த ஸ்ரீ சுசீந்த்ர தீர்த்தர், வேங்கடநாதரை தமக்கு அடுத்து பீடாதிபதியாக்க விரும்பி , தனது எண்ணத்தை அவரிடம் தெரிவித்தார். ஆனால் வேங்கடநாதரோ, தனது குடும்பப் பொறுப்பினை எடுத்துரைத்து, தனக்கு அப்பக்குவம் இன்னும் ஏற்படவில்லை என்று கூறினார். ஸ்ரீசுசீந்தரர், தமது உடல் நிலையையும், தனது இறுதிக்காலம் நெருங்குவதையும் உணர்ந்து, வேங்கடநாதருக்கு அடுத்து சிறந்து விளங்கிய சீடர் ஒருவரைத் தேர்ந்து எடுத்து, அவருக்கு ஸ்ரீயாதவேந்திரர் எனப் பெயரிட்டு , சந்நியாசம் அளித்து அவரை மடாதிபதி ஆக்கினார். சில நாட்களில் ஸ்ரீ சுசீந்தரரின் உடல்நிலை நன்கு தேறியவுடன், ஸ்ரீயாதவேந்திரர் தீர்த்த யாத்திரை புறப்பட்டுச் சென்றார்.

ஸ்ரீ யாதவேந்திரர் தீர்த்த யாத்திரை சென்ற சில நாட்களிலேயே ஸ்ரீ சுசீந்தரரின் உடல் மிகவும் மோசமாகியது. தன்னால் மூல ராமர் பூஜை தடைப்படுமோ என அஞ்சியவர் ஸ்ரீராமா என பகவானைச் சரண் அடைந்தார். ஸ்ரீராமர் , ஸ்ரீசுசீந்திரரின் கனவில் தோன்றி நான் வேங்கடநாதனைச் சம்மதிக்க செய்கிறேன்.நீ அவனுடன் பேசி சந்தியாசம் நல்கி, ஸ்ரீ ராகவேந்திரர் என பெயரிடும்படி கூறி, ஆசி அளித்து மறைந்தார். ஸ்ரீராமர் ஆணைப்படி மறுநாள், மடத்திற்கு வந்த வேங்கடநாதனிடம், ஸ்ரீ சுசீந்தரர் தனது நிலைமை மற்றும் தான் கண்ட கனவையும் எடுத்துக்கூறி, வேங்கடநாதன் சந்நியாசம் ஏற்க வேண்டியதை வலியுறுத்தினார். ஆனால் வேங்கடநாதனோ, பதில் கூறாமல் குருவை நமஸ்கரித்து, ஸ்ரீ மடத்தை விட்டு மனச்சுமையுடன் வீடுதிரும்பினார்.

அன்று முழுவதும் வேங்கடநாதர் பிரமை பிடித்தவர் போல் அமர்ந்திருந்தார். இரவு வெகு நேரமாகியும் உறக்கம் வரவில்லை . பின்னிரவில் அவர் முன் ஸ்ரீசரஸ்வதி தேவி தோன்றி, வேங்கடநாதா, நீ சந்நியாசம் மேற்கொண்டே ஆகவேண்டும். இது என் கட்டளையன்றி விதியைப் படைத்த ப்ரம்மாவின் கட்டளையும் ஆகும். நான் உம்மிடம் பூரணமாக வாசம் செய்ய வேண்டும். நீ தெளிந்த மனம் பெற்று சந்நியாசம் ஏற்றுக் ஏற்றுக்கொள்வாயாக எனக்கூறி, மந்த்ரோபதேசம் செய்வித்து, மூலமந்த்ரத்தை ஓதி, ஸ்ரீ சரஸ்வதி தேவி மறைந்தார். ஸ்ரீ சரஸ்வதி தேவியின் அருளால் தெளிவு பெற்ற வேங்கடநாதர், உலக நன்மைக்காக, சந்நியாசம் மேற்கொள்ள வைராக்யத்துடன் முடிவெடுத்தார். மறுநாள், குருவைச் சந்தித்து தனது அனுபவத்தைக் கூறி சந்நியாசம் ஏற்க சம்மதித்தார்.

ஸ்ரீ சுசீந்த்தரரே முன்னின்று , வேங்கடநாதரின் மைந்தர் லக்ஷ்மி நாராயணனின் உபநயனத்தை செய்வித்தார். பின் ஸ்ரீசுசீந்திரர் , வேங்கடநாதர் மற்றும் சில சிஷ்யர்களுடன் தஞ்சாவூர் சென்றார். சாலிவாகன சகம் 1545(தோராயமாக கி.பி. 1623-1624) ருத்ரோத்காரி வருஷம், துர்மதி ஸம்வத்ஸரம் பால்குண சுத்த த்வீதையை சுபயோக, சுபமுகூர்த்த காலை நேரத்தில் வேத மந்த்ர,மங்கள கோஷங்களுடன், ஸ்ரீசுசீந்தர தீர்த்தர், ஸ்ரீ வேங்கடநாதருக்கு காஷாய வஸ்த்திரம் கொடுத்து, ரத்னாபிஷேகம் செய்து ஆஸ்ரமத்தை வழங்கி ஆசி புரிந்தார். பின் மூலமந்த்ர உபதேசம் செய்வித்து, அவருக்கு ஸ்ரீ ராகவேந்த்ர தீர்த்தர் எனும் பெயரை ஸ்ரீ மூலராமர் ஆணைப்படி சூட்டினார்.

தனது கணவரின் சந்யாசத்தை கேள்விப்பட்ட சரஸ்வதி பாய், துயரம் தாங்காமல், தனது மகனை ஸ்வாமி படத்தின் முன் கிடத்தி, பின் வீட்டை விட்டு வெளியேறி, ஓர் பாழடைந்த கிணற்றில் குதித்து தன் உயிரை விட்டாள். கணவரின் மீது அதிக பாசம் கொண்ட சரஸ்வதி பாய், பிசாசாக மாறி ஸ்ரீ ராகவேந்திரர் முன் தோன்றி அரற்றத் துவங்கினாள். ஸ்ரீராகவேந்திரர் தனது தபோ பலத்தால், பிசாசின் மீது தனது கமண்டல தீர்த்தத்தை தெளித்து சரஸ்வதி பாய்க்கு நற்கதி அளித்தார். குழந்தை லக்ஷ்மி நாராயணன், அவனது பெரியப்பா குருராஜராவ் அரவணைப்பில் வளர்ந்து வந்தான். சந்யாசம் மேற்கொண்ட ஸ்ரீராகவேந்திரர் மடத்தை திறம்பட நடத்தினார். சில காலம் கழித்து ஆஸ்ரமம்நியமப்படி, தேசாந்திரம் புறப்பட்டார். சென்ற இடங்களில் எல்லாம் பல அற்புதங்களை நிகழ்த்தி, பலருடைய துயர் துடைத்ததுடன் உலக நன்மையையும் பராமரித்தார். தனது அருள் பெற்ற திவான் வெங்கண்ணன் மூலம் அதோனி நவப் சித்தி மசூத்கானிடம் துங்கபத்ரா நதிக்கரையோரம் அமைந்த மாஞ்சால கிராமத்தைக் கேட்டுப் பெற்றார். அந்த கிராமத்தின் தேவதையான மாஞ்சால அம்மனின் அனுமதி பெற்று தனக்கான ப்ருந்தாவனத்தை தானே உருவாக்கினார். ப்ருந்தாவனத்தில் பிரம்ம தண்டத்தை தோளில் சாய்த்து கமண்டலத்தை கீழே வைத்து துளசி மாலையை வலது கையில் துாக்கிப் பிடித்தபடி யோக முத்திரைகளுடன் பத்மாசனத்தில் அமர்ந்தார். சிறிது நேரத்தில் துளசி மாலை கீழே நழுவியது. முன்னர் ஸ்ரீராகவேந்திரர் ஆணைப்படி திவான் வெங்கண்ணா ப்ருந்தாவனத்தை பந்தனம் செய்ய துவங்கினார்.

ragavendra swamigal aradhana mahotsavam


ragavendra swamigal aradhana mahotsavam

ஸ்ரீ ராகவேந்திரர் சிரசு வரையில் ஏற்கனவே தயாராக வைத்திருந்த கற்களால் ப்ருந்தாவனம் நிரப்பப்பட்டது. சிரசிற்கு மேல் 1200 சாளக்ராம கற்களால் ப்ருந்தாவனம் நிரப்பப்பட்டது. அதன் மேல் தயாராக வைத்திருந்த விசேஷ பலகைக்கல்லை வைத்து, பின்னர் அதன் மீது துங்காநதியின் வண்டல் மண்ணைப் (மருத்திகை)பரப்பி பந்தனம் செய்தனர். பின்னர் ஸ்ரீ யோகீந்தரர் ப்ருந்தாவனத்திற்கு துாப, தீப ஆராதனை செய்து சாஷ்டாங்கமாக வீழ்ந்து வணங்க, பக்தர்கள் அனைவரும் வீழ்ந்து வணங்கி ஸ்ரீ ராகவேந்திரர் ஆசி பெற்றனர். ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள் விரும்பியவாறு அவரது ப்ருந்தாவனத்திற்கு எதிரில் ஸ்ரீ ஆஞ்சநேய மூர்த்தியை ஸ்ரீ யோகீந்த்ரதீர்த்தர் ப்ரதிஷ்டை செய்தார். 

Tags:    

Similar News