பெண்கள் தின மாரத்தான்
ஈரோடு மகளிர் தின மாரத்தான் போட்டி, சிறுவர், சிறுமியர், பெண்கள் என ஆறு பிரிவுகளில் போட்டி நடைபெற்றது;
பெண்கள் தின மாரத்தான் போட்டியில் 1,400க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு சிறப்பு
ஈரோட்டில் உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு மாரத்தான் போட்டி சிறப்பாக நடைபெற்றது. வி.வி.சி.ஆர். முருகேசனார் செங்குந்தர் மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் செங்குந்தர் கல்வி கழகம் சார்பில் இப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிறுவர், சிறுமியர், பெண்கள் என ஆறு பிரிவுகளாக பிரித்து நடத்தப்பட்ட இந்த மாரத்தான் போட்டியில் 1,400க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
ஈரோடு செங்குந்தர் பள்ளி மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர் போட்டியைத் தொடங்கி வைத்தார். ஓட்டப்பந்தயம் கலெக்டர் அலுவலகம், பஸ் நிலையம் பகுதி வழியாகச் சென்று, மீண்டும் செங்குந்தர் பள்ளி மைதானத்தில் நிறைவடைந்தது. 3 கிலோமீட்டர் மற்றும் 6 கிலோமீட்டர் தூரத்திற்கு நடத்தப்பட்ட இப்போட்டியில், ஆறு பிரிவுகளிலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களுக்குக் கேடயம் மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்த மாரத்தான் போட்டியின் ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகிகளான சிவானந்தன், மாசிலாமணி, ரவிச்சந்திரன், புஷ்பராஜ், ரவி, கிருஷ்ணகுமார் மற்றும் முருகேசன் ஆகியோர் சிறப்பாகச் செய்திருந்தனர்.