பவானி ஆப்பக்கூடலில் வேகத்தடை அமைக்க கோரிக்கை
ஆப்பக்கூடல் நால்ரோட்டில் வேகத்தை கட்டுப்படுத்த வேகத்தடை அமைக்க மக்கள் வேண்டுகோள்;
ஆப்பக்கூடல் நால்ரோட்டில் வேகத்தடை கோரிக்கை
பவானியை அடுத்த ஆப்பக்கூடல் நால்ரோட்டில் அந்தியூர் சாலையில் வாகனப் போக்குவரத்து அதிகமாக உள்ளது. இப்பகுதியில் வாகனங்கள் அதிக வேகத்தில் செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இந்த விபத்துகளைத் தவிர்க்க வேகத்தடை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்களிடமிருந்து எழுந்துள்ளது.
முன்னதாக இதே போன்ற புகார் எழுந்ததைத் தொடர்ந்து, கவுந்தப்பாடி சாலையில் நெடுஞ்சாலைத்துறையினர் வேகத்தடை அமைத்தனர். இதேபோல் ஆப்பக்கூடல் நால்ரோட்டில் உள்ள அந்தியூர் சாலையிலும் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.