நாமக்கல் அரசு கல்லூரியில் படைப்புக்கலை கருத்தரங்கம்

நாமக்கல் அரசு கல்லூரியில், படைப்புக்கலை என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

Update: 2021-09-27 12:45 GMT

கோப்பு படம்

சர்வதேச சுற்றுலா தினத்தை முன்னிட்டு, நாமக்கல் அண்ணா அரசு கல்லூரியின் ரெட் ரிப்பன் கிளப் சார்பில்,  படைப்புக்கலை என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு, கல்லூரி முதல்வர் முருகன் தலைமை வகித்து பேசியதாவது:

படைப்பாளன் சுயசிந்தனை உடையவன், மற்றவர்களிடம் இருந்து வேறுபட்ட பார்வையை உடையவன், அந்தப் பார்வையே அவனைப் படைப்பாளனாக ஆக்குகிறது. படைப்பாளனுக்குச் சமூகத்திலும் வரலாற்றிலும் கிடைக்கும் அங்கீகாரமும் மதிப்பும் சிறப்பானது. எந்தச் செயல்பாட்டையும் நாம் கலையாக மாற்ற முடியும்.

நம்முடைய ஈடுபாடே அச்செயலைக் கலைத்தன்மை வாய்ந்ததாக ஆக்கும். மாணவப் பருவத்தில் நிறைய வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அந்த வாசிப்புப் பயிற்சியே பின்னாளில் படைப்பாளியாக உயர்த்தும் என பேசினார்.

இதில்,  தமிழ்த் துறைத்தலைவர் நடராஜன், தாவரவியல் துறை உதவிப்பேராசிரியர் வெஸ்லி மற்றும் கல்லூரிப் பேராசிரியர்கள், இரண்டாம் ஆண்டு தமிழ், கணிதம் மற்றும் வணிகவியல் துறை மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். முடிவில்,  முதுகலைத் தமிழ் இரண்டாம் ஆண்டு மாணவி பூர்ணிமா நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, கல்லூரியின் செஞ்சுருள் சங்கத் திட்ட அலுவலர் சந்திரசேகரன் செய்திருந்தார்.

Tags:    

Similar News