நாமக்கல்லில் மக்கள் குறைதீர் கூட்டம்: பொதுமக்கள் 371 மனுக்கள் அளிப்பு

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் முகாமில் பொதுமக்கள் 371 கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

Update: 2022-05-10 01:45 GMT

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், கலெக்டர் ஸ்ரேயாசிங், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் முகாமில் பொதுமக்கள் 371 கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து மனுக்களைப் பெற்றார். கூட்டத்தில் பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி மொத்தம் 371 கோரிக்கை மனுக்களை அளித்தனர். அவற்றை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கி விரைவில் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். நிகழ்ச்சியில் டிஆர்ஓ கதிரேசன், சமூக பாதுகாப்புத்திட்ட சப்கலெக்டர் தேவிகா ராணி உள்ளிட்ட துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News