நாமக்கல்: ரூ.256 கோடியில் புதிய குடிநீர் திட்டப்பணிகள்: எம்எல்ஏ ஆய்வு

நாமக்கல் நகராட்சிப் பகுதியில் நடைபெற்று வரும் ரூ.256 கோடிமதிப்பிலான புதிய குடிநீர் திட்டப்பணிகளை எம்எல்ஏ ராமலிங்கம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2021-08-12 06:00 GMT

நாமக்கல் நகராட்சி புதிய குடிநீர் திட்டப்பணிகளுக்காக தும்மங்குறிச்சியில் கட்டப்பட்டுள்ள 9 லட்சம் லிட்டர் கொள்ளவுள்ள பம்பிங் ஸ்டேஷனை எம்எல்ஏ ராமலிங்கம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில் நகராட்சி கமிஷனர் பொன்னம்பலம்.

நாமக்கல் :

நாமக்கல் நகராட்சிப் பகுதியில் நடைபெற்று வரும் ரூ.256 கோடிமதிப்பிலான புதிய குடிநீர் திட்டப்பணிகளை எம்.எல்.ஏ ராமலிங்கம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாமக்கல் நகராட்சிப் பகுதிக்கு குடிநீர் வழங்குவதற்காக, ஜேடர்பாளையம் காவிரி ஆற்றில் இருந்து ரூ256 கோடி மதிப்பீட்டில் புதிய குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக தும்மங்குறிச்சியில், 9 லட்சம் லிட்டர் கொள்ளளவு பம்பிங் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் 4 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. குடிநீர் திட்டப்பணிகளை நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்ட ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அவர் ஆலோசனை வழங்கினார். நகராட்சி கமிஷனர் பொன்னம்பலம், இன்ஜினியர் சுகுமார், குடிநீர் வடிகால்வாரிய நிர்வாகப் பொறியாளர் மதியழகன், உதவி பொறியாளர் சங்கரன், நகர திமுக பொறுப்பாளர் சிவக்குமார், முன்னாள் கவுன்சிலர் சரவணன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News