வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி

வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்து உள்ளது.

Update: 2024-05-10 05:04 GMT

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த, வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு பள்ளி மாணவர்களை, நிர்வாகத்தினர் பரிசு வழங்கி பாராட்டினார்கள்

நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ மணவிகள் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், இந்த ஆண்டு 120 மாணவ மணவிகள் 10ம் வகுப்பு படித்து பொதுத்தேர்வு எழுதினார்கள். அனைத்து மாணவ மாணவிகளும் தேர்ச்சி பெற்று, பள்ளி 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளது. இப்பள்ளி 10ம் வகுப்பு மாணவர்கள் சோபிகா, நித்திஸ் ஆகியோர் 500க்கு 496 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் இடம் பெற்றுள்ளனர். மாணவி பிரியங்கா 495 மதிப்பெண்கள் பெற்று 2ஆம் இடம் பெற்றுள்ளார். மாணவி நிகாஷினி 500க்கு 493 மதிப்பெண்கள் பெற்று 3ஆம் இடம் பெற்றுள்ளார்.

இப்பள்ளியில் படித்து 10ம் வகுப்பு தேர்வு எழுதிய 120 மாணவ மாணவிகளில் 54 பேர் 450க்கு மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 96 பேர் 400 க்கும் மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். பாடவாரியாக மாணவ மாணவிள் பெற்ற முதல் மதிப்பெண், தமிழ் 98, ஆங்கிலம் 99, கணிதம் 100, அறிவியல் 100, சமூக அறிவியல் 100 பெற்றுள்ளனர். கணிதத்தில் 17 பேரும், அறிவியலில் 2 பேரும் , சமூக அறிவியலில் 23பேரும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்த மாணவ மாணவிகளை கொங்குநாடு கல்வி நிறுவனங்களின் தாளாளர் டாக்டர் ராஜன், மெட்ரிக் பள்ளியின் ஆலோசகர் டாக்டர் ராஜேந்திரன், தலைவர் ராஜா, செயலாளர் சிங்காரவேலு, இயக்குநர் ராஜராஜன், முதல்வர் சாரதா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

Similar News