50 சட்ட தன்னார்வ தொண்டர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

மாவட்ட மற்றும் தாலுகா அளவிலான சட்டப்பணிகள் ஆணைக்குழுவில், சட்ட தன்னார்வ தொண்டர்கள் 50 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Update: 2024-05-09 05:30 GMT

பைல் படம் 

மாவட்ட மற்றும் தாலுகா அளவிலான சட்டப்பணிகள் ஆணைக்குழுவில், சட்ட தன்னார்வ தொண்டர்கள் 50 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிபதி குணசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

டில்லி தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு, மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு உத்திரவுப்படி, நாமக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் திருச்செங்கோடு, ராசிபுரம், பரமத்தி, சேந்தமங்கலம், குமாரபாளையம் ஆகிய தாலுகா சட்டப் பணிகள் குழுவிற்கு, சட்டம் சார்ந்த தன்னார்வ தொண்டர்கள் 50 பேருக்கு மிகாமல் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

இப்பணிக்கு ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மூத்த குடிமக்கள், எம்.எஸ்.டபிள்யூ. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், டாக்டர்கள், மாணவர்கள் மற்றும் சட்டக்கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள், திருநங்கைகள், அடிப்படை கல்வி அறிவுள்ளவர்கள், கம்ப்யூட்டர் அறிவுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விருப்பம் உள்ளவர்கள் நாமக்கல்.டிகோர்ட்.ஜிஓவி.இன் என்ற நாமக்கல் மாவட்ட கோர்ட் வெப்சைட்டில் இருந்து விண்ணப்பங்களை டவுன்லோடு செய்து, பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன், வரும், 15ம் தேதிக்குள் பதிவு தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ விண்ணப்பம் செய்ய வேண்டும்.

இண்டர்வியூ மூலம் தேர்வு செய்யப்படுபவர்களின் விபரம், நாமக்கல் மாவட்ட கோர்ட் வெப்சைட்டில் மட்டுமே வெளியிடப்படும். இப்பணி முற்றிலும் தற்காலிகமானது. அடிப்படை சம்பளம் எதுவும் இல்லை. சேவைக்கு தகுந்த மதிப்பூதியம் மட்டும் அளிக்கப்படும். மேலும் விபரங்களுக்கு, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு அல்லது தாலுகா சட்டப் பணிகள் குழுக்களை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News